அனுப்புதல்
அகிலாண்டீஸ்வரி ஞானமூர்த்தி,
11, மேற்க்கு வீதி, வெள்ளோட்டாம்பரப்பு,
பாசூர் – வழி ஈரோடு மாவட்டம்.
பொருள்; இலவச எரிவாயு இனைப்பு சிலிண்டர் மானியம் வழக்கமான வங்கி
கணக்கிற்க்கு தொடர்ந்து அனுப்பவேண்டி
ஐயா,
வணக்கம். நான் மேற்படி முகவரியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் சாதாரண கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். எனது இலவச எரிவாயு இனைப்பு எண்: 00010191 ஆகும். நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற இனைப்பை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஹரிசூரியா இன்டேன் கேஸ் நிறுவனத்திற்க்கு மாற்றி சிலிண்டர் பெற்று வந்தேன். சிலிண்டர் மானியம் பெற கணபதிபாளையம் கரூர் வைஸ்யா வங்கியில் கணக்கு எண்:[protected] பதிவு செய்து மானியம் பெற்றுவந்தேன். கடந்த 13 மாதங்களாக எனது வங்கிக்கு, எனது கணக்கிற்க்கு மானியம் வரவில்லை. இது குறித்து நான் சிலிண்டர் பெற்றுவந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஹரிசூரியா இன்டேன் கேஸ் நிறுவனத்திற்க்கு சென்று கேட்டால் அவர்கள் “ உங்கள் பணம் கனரா வங்கிக்கு அனுப்பபட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். எனக்கு எந்த கனரா வங்கி கிளையிலும் எந்த வங்கி கணக்கும் இல்லை, என்று எடுத்து கூறியும் கேஸ் கம்பெணியில் அலட்சியமாக கனராவங்கியில் போய் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி அனுப்புகிறார்கள். சாதாரண கூலி தொழிலாளியான எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே சமூகம் அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய மாணிய தொகையை எனது கரூர் வைஸ்யா வங்கி கணக்கிற்க்கு அனுப்பி உதவமாறு தங்களை மிக்க தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன். நன்றி
5-9-2018
மலையம்பாளையம்
செல்;[protected]
Was this information helpful? |
Post your Comment