எனது பெயர் ஷெரின். நான் 18/4/2024 அன்று 07.45 மணி அளவில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் 1 to 1 பஸ்ஸில் பணம் செய்திருந்தேன். திருநெல்வேலி பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்தவுடன் கூட்டமாக மக்கள் இடம் பிடிப்பதற்காக ஏறும் வழியில் நின்று கொண்டு இறங்க வேண்டியவர்களை இறங்கவும் அனுமதிக்காமல் அங்குமிங்கும் தள்ளியதால், நானும் இன்னொரு பயணியும் கீழே தள்ளி விடப்பட்டோம். அதில் எனக்கு கையில் பலத்த காயமும், இன்னொரு பயணிக்கு தலையில் அடிபட்டு சுயநினைவு இல்லாமல் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆண்கள் இறங்கும் வழியில் என்னிடம் அத்துமீறியதையும் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கூட்ட நெரிசலை முறைப்படுத்த அரசு பணியாளர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எனவே, இதுபோல் மேலும் நடக்காமல் இருக்க கூட்ட நெரிசலை குறைக்க மேலும் பேருந்துகள் திருநெல்வேலி டு நாகர்கோயில் வழியில் உபயோகப்படுத்தலாம். மேலும் கவுண்டர் அடிப்படையில் டிக்கெட் விநியோகம் செய்தால் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏற முயற்சிக்க மாட்டார்கள். வெளியில் நின்று டிக்கெட் பெற்ற பிறகே வண்டியில் ஏற முயற்சிப்பார்கள். எனவே இவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் Was this information helpful? |
Post your Comment