Grt Jewellery Shop — Sub: :

Address:Peelamedu,Coimbatore

ஐயா, கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் உங்கள் வாடிக்கையாளர், சென்னை, Tநகர் கிளையில் உள்ள மேலாளர் திரு சந்திரசேகர் அவர்களை நன்கு அறிவோம், நாங்கள் ஓராண்டுக்கு முன் செயின், கம்மல் வாங்கினோம், அது குழந்தைக்கு அணிவிக்கபட்டதால், செயின் அறுந்துவிட்டது, கம்மல் வெட்டி எடுத்தோம், இந்த இரண்டையும் போட்டு வேறோ நகையோ, அல்லது பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று கோவையில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிளையில் கொடுக்கபோனோம்(இவை இரண்டும் இதே கடையில் வாங்கியதுதான்)அங்கிருந்த அப்ரேசர் திரு.விக்னேஷ் என்பவர் நகையை சோதித்தார், இதற்கு பில் இருக்கிறதா என்றார், அதன் பிறகு செயின் இங்கு வாங்கியது, கம்மல் கீர்த்திலாலில் வாங்கியது என்று கூறி செயினுக்கு எஸ்டிமேசன் கொடுத்தார், வீட்டிற்கு வந்து எமது சம்பந்தியிடம் அதற்கான பில் உங்களிடம் உள்ளதா என்று கேட்டோம் அவர்களும் பில்லை தேடி வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள்(குறிப்பு:எதற்... நாம் போட்ட நகைக்கு பில் எல்லாம் கேட்கிறார்கள் என்று, தேவையில்லாத சங்கடங்கள்). மீண்டும் கடைக்கு சென்று இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த திரு பிரகாஷ் மேனேஜர் அவர்களுடம் நடந்த சம்பவங்களை கூறினோம், அவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு இது இங்கு வாங்கின கம்மல்தான் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று கூறி அப்ரேசரை அழைத்து கேட்டு எச்சரித்தார், இந்த அப்ரேசர் செய்த செயல் ஏற்கக்கூடியது இல்லை, தங்கள் பொருளையே இது வேறு ஒருவரது என்று கூறும் அளவுக்குத்தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா, இதனால் உங்கள் நிறுவனத்தின் மீது உள்ள நம்பகதன்மை, மனதிருப்தி, ஊழியர்களுக்கு சரியான பயிற்சியின்மை, வாடிக்கையாளர்களை மனமகிழ்ச்சி இல்லாமல் கையாள்வது போன்ற செயல்கள் உறுதிசெய்யப்படுகிறது, இது போன்ற நபர்களால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடுகிறது, இதுபோன்ற செயல்கள் மேற்கொண்டு நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (1)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Peelamedu,Coimbatore
    India
    File a Complaint