Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Complaint
N
N.KALAISELVI
from Tiruchirappalli, Tamil Nadu
Address:
621211
எனது அண்ணன் திரு ராஜகோபல் அவர்கள் 24.9.16 அன்று திருச்சி டோல்கேட்டில் இருந்து முசிறிக்கு அரசு பேருந்து கும்பகோணம் கிளை வண்டியில் ஏறினார் வண்டி எண் TN49N1521 நேரம் இரவு 7.15 இருக்கும் டிக்கட் பதிவு நேரம் 19:27:09 அந்த வண்டி முசிறிக்கு இரவு சுமார் 8.15க்கு வந்தது. எனது அண்ணன் பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் என அமர்ந்து இருந்தார்கள் ஆனால் பேருந்து புதிய பேருந்து நிலையம் செல்லாமல் நேராக குறுக்கு வழியில் செல்ல தொடங்கியது இதை அறிந்த எனது அண்ணன் மற்றும் சிலர் ஏன் பேருந்து புதிய பேருந்துநிலையம் செய்யவில்லை நாங்கள் அங்கு தான் இறங்க வேண்டும் என கேட்ட போது அந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரும் சேர்ந்து நாங்கள் புதிய பேருந்துநிலையம் செல்ல மாட்டோம் என்று கூறி பயணிகளை தரக்குறைவான வார்த்தைகளில் திட்ட ஆரமித்துள்ளனர். இதற்கு பயணிகள் எல்லாம் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். வண்டியை நிறுத்தி இறக்கி விடுங்கள் என்று கேட்ட போது இங்கு எல்லாம் இறக்கி விட முடியாது என கூறி தொடர்ந்து வண்டியை இயக்கினார்கள் வண்டியை நிறுத்த சொல்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தஉடன் வேண்டும் என்றே இவர்கள் கேட்ட இடத்தில் இருந்து 5 கி/மீ தள்ளி முசிறி-குளித்தலை பாலத்தில் கொண்டு போய் இறக்கி விட்டனர் இதனால் சுமார் 7 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் அவர்கள் எல்லாம் வயது ஆன முதியவர்கள் மற்றும் ஊருக்கு புதியவர்கள். அதிகாரிகளிடம் புகார் கொடுப்போம் என்று கூறிய போது நீ எவனிடம் வேண்டுமானாலும் புகார் கொடுத்துக்கொள் என்னை ஒன்றும் புடுக்க முடியாது என்று நடத்துனர் கூறினார் எனவே பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட மேல் அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் நடத்துனர் பெயர் சரியாக தெரியவில்லை
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment