பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
திருவள்ளூர் – 602001.
கைபேசி: [protected]
பொருள்: “கல்லறைத் தோட்டம் சுற்றுச்சுவர், சாலை வசதி, மின் விளக்கு அமைத்து தர கோரிக்கை"
இடம்: பழவேற்காடு பஞ்சாயத்து- இஸ்ரவேல் குப்பம். [protected], [protected]
மதிப்புக்குரிய ஐயா,
நாங்கள் பழவேற்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட இஸ்ரவேல் குப்பம் பகுதியில் வசித்து வருகின்றோம் எங்கள் குப்பத்துக்கு உட்பட்ட கல்லறைத் தோட்டம் சுற்றுச்சுவர் இல்லாமலும் மின்விளக்கு இல்லாமலும் கல்லறைக்கு செல்லும் சாலை வசதியும் இல்லாமல் உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேலான பார்வைக்கு எடுத்து கல்லறைத் தோட்டத்திற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும், இஸ்ரவேல் குப்பத்தின் ஒட்டுமொத்த மக்களின் மன விருப்பத்தை நிறைவேற்ற தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தங்களின் மேலான நடவடிக்கைக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி.
Was this information helpful? |
Post your Comment