Manmalai Farmers Welfare Association — Bribe - VAO -Tranquebar-Nagapattinam -request control

Address:609301
Website:www.mmlfrmwa.com

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் பணி புரியும் கிட்டதிட்ட 90% கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகளிடம் லஞ்சங்களை பெற்று வருகின்றார்கள். தரங்கம்பாடி வட்டாட்சியரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நீங்கள் மாற்றாலாகி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டுமாறு, அனைத்து நாகப்பட்டினம் மாவட்ட விவசாய ஒருங்கினைப்பு சங்கத்தின் பிரதிநிதி மூலம், வேண்டி கேட்டு கொள்கின்றோம்.
விவசாயிகள் மழை இல்லாமல், சரியான பாசன வசதி இல்லாமல், விவசாயத்தினை சிரமம் மேற்கொண்டு செய்து வரும் வேலையில், நிலங்களுக்கு வங்கியில் கடன் வாங்குவது முதல், பட்டா, சிட்டா அடங்கல் கொடுக்க வேண்டி யுள்ளது.இவர்களுக்கு அலுவலகத்தில் எதையும் கொடுப்பது இல்லை.விஏஓ வீட்டிற்கு கிராம உதவியாளார் சிட்டாக்களை தயார் செய்து விவசாயிகளை அனுப்பி வைக்கின்றார்கள். இதற்கு இவர்கள் கிராம உதவியாளர்கள் மூலம், விவசாயிகளிடம் கேட்டு பெருகின்றன.மேலும், நிவாரணம் கிடைக்கும் போது, ஏக்கருக்கு கடந்த ஆண்டு, இன்சுரன்சில் ரூபாய் 100 முதல் ரூபாய் 150/- வரை லஞ்சமாக பெற்று உள்ளனர்.வி.ஏ.ஓ.-க்கள் ஆஇவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுகின்றன.கடந்த ஆண்டு நிவாரணம் பெற்ற போது, வி ஏஓ. மூலம் டோக்கன் கொடுத்தால்தான் கூட்டுறவு சங்கத்தில் பணம் பெரும் நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆக்கூர், கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு அழிந்ததற்கு நிவாரண்ம் பெற்ற போது, சுற்றிலும் உள்ள ஊராட்சிகளின் உதவியாளர்கள் லஞ்சத்தினை பெற்றதை மொபைலில் எடுத்து பல விவசாயிகள் கொடுத்துள்ளதை சாட்சியமாக வைத்து உள்ளோம்.
.இவற்றினை எதிர்த்து சில விவசாயிகள் கேட்டதால், விவசாயிகளை மூன்று நாட்களுக்கு அலை கழிக்க வைக்கின்றன.இந்த ஆண்டு, நாங்கள் தாலுக்காவில், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களை கண்காணிக்க விவசாயிகள் சில ஆட்களை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.குறைந்த 20- ஊராட்சிகளில், எங்களின் குழு உறுப்பினர்கள், கண்காணிப்பில் இருந்து பிடிபட்டால், நாங்கள் உங்களுக்கு நிறுபிக்கும் நிலை ஏற்படும் நிலை வந்தால், வட்டாட்சியர் ஆகிய நீங்கள் விடுப்பில் செல்ல நாங்கள் பரிந்துறை செய்கின்றோம்.கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்யும் அட்டுழியம் சொல்லிக்க முடியாத நிலையில் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் யாரும் விவசாயிகளை வீட்டிற்கு கூப்பிட கூடாது என்பதை நீங்கள் கட்டளை இட வேண்டும்.. கிராம நிர்வாக அலுவலர் 10மணி முதல் மாலை 5-மணி வரை அலுவலகத்தில் பணி புரிய ஆவண நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெளியில் கேம்ப் செல்லும் போது, அலுவலக பதிவு புத்தகத்தினை உருவாக்கி அதில் குறிப்பிட்டு எழுத ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவர்கள் அலுவலகம், அமைப்பு ரீதியாக செயல்படாததற்கு, கடுமையாக நாங்கள் வட்டாட்சியர் அலுவகத்தின் நிர்வாக திறமை சரியில்லாததை தெரிவிக்கின்றோம்.நீங்கள், வட்டாட்சியர் என்ற வகையில், வி ஏ ஓக்களுக்கு விழிப்புணர்வு கூட்டத்தினை நடத்த வேண்டும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் .வட்டார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலகர்களுடன் சேர்ந்து, கையூட்டுக்கு துணை நிற்கின்றார்கள்.நீங்கள் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னால், நாங்கள் பொது மக்களிடம் வசூலித்து தருகின்றோம். வருவாய் துறையில், ஒவ்வொருவரும், த்னது பணியினை சிறப்பாக செய்வதற்கு வட்டாட்சியர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை, எங்கள் விவசாயிகாளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், மண்மலை விவசாயிகள் நல சங்கம் தெரிவிக்கின்றது. மக்களுக்காகத்தான் அரசு ஊழியர்கள். என்பதை . கிராமத்து அரசன் என்று நினைத்து செயல்படும் விஏஓ-க்களுக்கு தெரிவிக்க 08/11/2016 அன்று சங்கம் தெரிவிக்கின்றது.வறுமையில் வாடும் விவசயிகளை, கருணை மனதுடன் நோக்க வேண்டுகின்றோம்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Tharangambadi, Tamilnadu
    India
    File a Complaint