Address: | Janaki ammal layout, Ganapathy Post, Avarampalayam, Coimbatore - 641006. |
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் (படம்)
கோவை ஆவாரம்பாளையம் ஜானகி அம்மாள் லே -அவுட் நகரில் சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் மிதக்கிறது. இதனால் கழிவுநீர் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாக்கடை சுற்றம் செய்யுமாறு பல முறை
கோரிக்கை விடுத்தோம்.ஆனால் இது வரையிலும் சாக்கடை சுற்றம் செய்ய ஆட்கள் யாரும் வரவில்லை.இதன் காரணமாக பொது மக்களே சாக்கடை சுற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது..
எனவே சாக்கடையில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஜானகி அம்மாள் லே அவுட், ஆவாரம்பாளையம். Was this information helpful? |