| Address: Loganathan, S/o Mariyappan, D.No.MIG 606, 1/1591, Collectrate Post, Dharmapuri, Tamil Nadu, PIN-636705 | | Website: store.croma.com/croma-dharmapuri-electronics-retail-and-repair-shop-virupakshipuram-dharmapuri-327717/Home |
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கலெக்ட்ரேட் அஞ்சல், மெர்குரி நகர், க.எண்.MIG 606, 1/1591 முகவரியில் வசித்து வரும் (லேட்) மாரியப்பன் குமாரர் லோகநாதன் ஆகிய நான் கூலி தொழில் செய்து வருகிறேன்.
நான் தருமபுரி, பை பாஸ் சாலையில் செயல்பட்டு வரும் CROMA The TATA Enterprises என்ற எலக்ட்ரானிக் கடைக்கு கடந்த 16.08.2024 தேதியில் QLED TV யை குறித்து விசாரித்தேன். அதற்கு கடை ஊழியர் ஒருவர் CROMA நிறுவனத்தின் QLED TV, 55" inch பற்றி தெரிவித்து இன்றைய தள்ளுபடி விலை போக TV யின் விலை ரூ.40, 118/- என தெரிவித்து இன்றே அட்வான்ஸ் தொகை செலுத்தி புக் செய்தால்தான் தள்ளுபடி கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட எமது கட்சிக்காரர் மேற்படி QLED TV யை பைனான்சில் (EMI) வாங்கவுள்ளதாக தெரிவித்தார். என்னிடம் உடனே புக் செய்துக்கொள்ளுமாறும் பைனான்ஸ் மேப்பிங்க் ஆனவுடன் 55" inch CROMA QLED TV யை டெலிவரி செய்து கொடுப்பதாக கடை ஊழியர் கூறியுள்ளார். இதை நம்பி நான் முன்பணமாக ரூ.5000/- யை CENTRAL BANK OF INDIA இன் Debit Card மூலம் தொகை செலுத்தினேன். அதற்கான ரசீதில் order number SOA[protected]. (Model number: CromaLED140cm 55UGD307601 WCGQLED). ஆனால், அதன் பிறகு சில நாட்கள் கடந்தும் நான் புக் செய்த CROMA QLED TV யை கொடுக்காமல் இருந்தார்கள். இது பற்றி பல முறை நேரில் கடைக்கு சென்று கேட்கும்போதெல்லாம் பைனாய்ஸ் மேப்பிங்க் ஆகவில்லை என கடை ஊழியர்கள் மற்றும் மேலாளர் ஆகியோர் என்னிடம் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த 29.08.2024 தேதியில் நான் கடைக்கு வந்து விசாரிக்கும்போது ரூ.8550/- செலுத்தினால் உங்கள் TV யை நாளை டெலிவரி செய்து கொடுப்பதாக கடை ஊழியர் தெரிவித்தார்கள். இதனால், ரூ.8550/- யை CENTRAL BANK OF INDIA இன் Debit Card மூலம் தொகை செலுத்தினேன். அதற்கான ரசீதில் இதன் order number SOA[protected]. (Model number: CromaLED140cm 55UGD307601 WCGQLED) இப்படியான நிலையில் நேற்று 30.08.2024 தேதியில் உங்கள் TV வந்து விட்டதாக கூறி எனது வீட்டில் ஒரு TV யை மேற்படி கடை மூலம் டோர் டெலிவரி செய்துவிட்டு சென்றார்கள். நான் வீட்டிற்கு வந்து TV யை பார்த்து அதிர்ச்சியுற்றேன். காரணம், நான் புக் செய்தது 55" inch CROMA QLED TV ஆனால் அவர்கள் கொண்டு வந்து வைத்து விட்டு சென்ற மாடல் Ultra HD LED என்ற TV. இது குறித்து மேற்படி கடைக்கு நான் நேரில் சென்று முறையிட்டேன். கடையில் வேலைக்கு புதிதாக சேர்ந்தவர்களுக்கு மாடல் பற்றியோ அதன் விலை குறித்தோ தெரியாது என்றும், எங்கள் மீது தான் தப்பு என்றும் கூறி, அதே மாடல் TV வேண்டுமென்றால் ரூ.52, 000/- ஆகும் என்று என்னிடம் கூறி எமது கட்சிக்காரர் புக் செய்த TV யை மாற்றி தர மறுக்கிறார்கள். கடை ஊழியர்களின் மேற்படி செயல்பாடுகள் நம்பிக்கை மோசடியாகும். இதனால் நான் பெருத்த மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் ரூ.5000/- முன்பணம் பெற்றுக்கொண்டு சுமார் 15 நாட்கள் அவரை அலைகழித்தது மட்டுமின்றி, ரூ.8550/- பெற்றுக்கொண்டு நான் புக் செய்த 55" inch CROMA QLED TV யை கொடுக்காமல் என்னை ஏமாற்றியுள்ளார்கள். எனவே இப்புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், ULTRA HD LED என்ற TV யை திரும்பப் பெற்றுக்கொண்டு நான் புக் செய்து ரூ.5000/- முன்பணம் மற்றும் ரூ.8550/- செலுத்திய 55" inch CROMA QLED TV யை மாற்றிக்கொடுக்க தக்க உத்தரவுகள் பிறப்பிக்குமாறு மிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
Was this information helpful? |
Post your Comment