இந்த கம்பெனி ஒரு மோசமான மோசடி கடன் வசதி செய்து தருகிற நிறுவனம். முதலில் என்னிடம் மூன்று லட்சம் ரூபாய்க்கு பன்னிரண்டாயிரம் டாக்குமெண்ட் செலவுகளுக்கு வேண்டுமென்று பணமாக வாங்கிக் கொண்டனர். எந்தவித வங்கி பரிவர்த்தனைகளும் இல்லாமல் கையில் மட்டுமே அந்த பணத்தை வாங்கியதும் உடனே உங்களுக்கு லோன் அங்கீகரிக்கப்பட்டு விட்டது அப்படி என்று பெரும் வார்த்தையில் ஒரு நாற்றம் அடித்த அறைக்குள் வைத்து நமக்கு ஒரு துண்டு சீட்டு அதாவது ஒரு பிரிண்ட் எடுத்த ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு வாங்கிக் கொள்கின்றனர். அதுவும் எப்படி இருக்கும் என்றால் நாம் செலுத்தும் இந்த பணம் திரும்ப கிடைக்காது என்ற ஒப்பந்தத்தின் படி அதனை வாங்கிக் கொள்கின்றனர். அதிலும் முக்கியமாக இன்னும் அதிகமாக பணம் வேண்டுமா என்று கேட்டுவிட்டு சரி மேலும் 20000 கட்டுங்கள். என்று உங்களை ஆசையை தூண்டி விடுவார்கள். உங்களது தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அந்த பணத்தையும் அங்கே இங்கே என்று கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்து செலுத்தும் படி செய்வார்கள். சரியாக பணம் கிடைக்கும் என்று நாம் நினைக்கும் நேரத்தில் இன்னொரு அழைப்பு வரும் அந்த அழைப்பில் உங்களுக்கு இன்னும் இருபதாயிரம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பர் அந்த இருபதாயிரம் செலுத்திய உடனே 15 நிமிடத்தில் பணம் வந்து சேர்ந்து விடும் என்று கூறுவார்கள் ஆனால் சிறிது நேரம் கழித்து நீங்கள் அழுத்தமாக கேட்டால் 30 லிருந்து 45 நிமிடம் பாருங்கள் மறுபடியும் நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தால் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு வரும் என்பார்கள் பின்பு ஒரு வழியாக இதோ பணம் செலுத்துகிறேன் எப்போது கிடைக்கும் என்று நீங்கள் மறுபடியும் ஆணித்தரமாக கேட்டால் இன்னும் நான்கு நாட்களாகும் என்பார்கள், இப்படியாக உங்களை மேலும் மேலும் கேட்டு கேட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு என்றுமே உங்களுக்கு பணம் கிடைக்காது .வீணாக இந்த நிறுவனத்தில் ஏமாறாதீர்கள். இந்த நிறுவனம் ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கிறது இது சம்பந்தமாக நிச்சயமாக அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் ஏனென்றால் இதுபோன்று நிறையவே பணத்தை இழந்து தவிப்பது நன்றாகவே தெரிகிறது நான் சென்றபோது கூட அங்கே பல பேர் நின்று அங்கே பிரச்சனை செய்து கொண்டிருந்தனர் இது சம்பந்தமாக அரசுக்கும் முதல்வர் தனி பிரிவுக்கும் கவனத்தில் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நிச்சயமாக இதில் சரி செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த நிறுவனத்தை நம்பவே நம்பாதீர்கள் ஏமாற்றிப் பேர்வழிகள் இங்கு வேலை செய்பவர்கள் தெள்ளத் தெளிவான ஒன்னாம் நம்பர் முதல் தரமான மோசடிப் பேர்வழிகள் நம்பாதீர்கள் நம்பாதீர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை மறுபடியும் மறுபடியும் இவர்களைப் போன்றவர்களை நம்பி கஷ்டப்படாதீர்கள் இந்த ஈசிசி சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம்
Post your Comment