| Address: 103 அப்புசாமி தெரு, செவ்வயல், கோவை 641045 | | Website: Star Vijay |
இன்றைய நீயா நானா நிகழ்ச்சியைப் போன்ற நடுநிலையற்ற நிகழ்ச்சியை நான் கண்டதாக நினைவில்லை. தலைப்பில் உள்ள "அசம்பாவிதம்" என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக ஒரு கருத்தாக்கம் முதலில் வைக்கப் பட்டது.
இதனை ஆண்கள் பெண்கள் என்ற இரு பாலரை எதிராளிகளாக வைப்பதே பெரிய பிழை. ஒரு பெண் தன்னை வன்புணர்விலிருந்து எப்படி காத்துக் கொள்ளலாம், ஏன் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அறிவுடைமை சார்ந்த முன்மொழிவுகளைப் "பெண்களிடம் குறைகாணல்", "துன்புற்றார் மேல் குற்றம் சுமத்தல்" என்ற மாற்று அணியினரின் கூற்றைச் சிறிதும் கேள்விக்கு உட்படுத்தாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்.
பெண்கள் தம்மைக் காத்துக் கொள்ள என்னென்ன செய்யலாம் என்ற கருத்தைப் போதுமான அளவு ஆராயவே இல்லை. பெண்கள் பாலும் குறை உண்டு என்று கூறியோரைத் திரு. கோபிநாதர் அணுகிய முறையே உள்ளுறை அச்சுறுத்தல் கொண்டதாக இருந்தது. அந்த அணியின் இயலாமை வெள்ளிடை மலையாகத் தெரிந்தது.
சிறப்பு விருந்தினர் ஓவியா அம்மையார் கூறிய கருத்துரையை நடாத்துநரான திரு. கோபிநாதர் பங்கு கொண்டோரின் உரையாடல் வாயிலாக வெளிக் கொணர இயலவில்லை என்பது வருத்தத்தையும் வெட்கத்தையும் தருகிறது.
ஒன்றரை மணிநேரம் வீணான ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
கலனல் வீர. இராச. வில்லவன்கோதை
மூதையர் (Veteran ) Was this information helpful? |
Post your Comment