Address: | Chennai, Tamil Nadu, 600001 |
நான் சென்னயில் உள்ள SRI VARI TVS புது விக்டர் வண்டிக்கு 28/6/17 பணம் முழுவதும் செலுத்தி 3/7/17 அன்று வண்டி பதிவு செய்து டெலிவரி வேண்டும் என சொல்லி வண்டியில் தற்பொழுது வரக்கூடிய ஹெட்லேம்ப்புக்கு கீழே வரக்கூடிய எல்ஈடி லைட்டுடன் வேண்டும் என சொல்லிவிட்டு வந்தேன், நான் 3/7/17 அன்று வண்டி கேட்டது ஏன்எனில் என்னுடைய ஜோதிடர் அன்று எடுத்தால் நல்லது என கூறி யிருந்தார், 3/7/17 அன்று நான் show room சென்று கேட்டால் RTO பதிவு செய்ய வண்டி எடுத்து செல்ல ஆட்கள் இல்லை எனவே இன்று முடியாது என கூறி என்னை அன்று திருப்பி அனுப்பிவிட்டார்கள், இருந்தும் நான் என் ஜோதிடரிடம் ஆலோசித்து புதன் கிழமையாவது கொடுங்கள் என்று சொல்லி விட்டு வந்தேன். புதன் கிழமை 5/7/17 அன்று டீலர் RTO பதிவை என்னுடைய தொடர் வற்புறுத்தல் காரணமாக முடித்தனர். அன்று மதியம் 2 மணியளவில் நான் show room நபரை கைபேசியில் அழைத்து எனக்கு வண்டி 4 to 5 மணிக்குள் நேரம் நன்றாக இருப்பதால் அந்த நேரத்தில் டெலிவரி வேண்டும் என சொன்னேன். அதற்குள் வண்டியில் மாட்டவேண்டிய அனைத்து extra fitting ஐ மாட்டி வைக்க கூறினேன்.என்னால் அந்த நேரம் செல்லமுடியவில்லை.உடனே 4.30 மணிக்கு show room நபரை அழைத்து வரமுடியவில்லை என்றும், 7 மணிக்கு வருவதாகவும் சொன்னேன். நான் 7 மணிக்கு என் மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டி டெலிவரி எடுக்க சென்றேன். சென்ற சமயம் அனைத்து கையேழத்து வாங்கும் படலத்தை முடித்து ஒரு இருட்டு பாதையில் வைத்து இது தான் உங்கள் வண்டி என காண்பித்து எடுத்து கொள்ளுங்கள் என சொன்னார்கள், அதுவும் வண்டி அப்பொழது தான் கழவி தண்ணீர் ஈரத்துடன், அப்பொழது பார்த்தால் நான் குறிப்பிட்டு சொன்ன ஹெட்லைட்டுக்கு கீழே கம்பனியில் இருந்துவரக்கூடிய எல்ஈடி லைட் இல்லை, அதே போல் நம்பர்பிளேட்டில் நம்பர் எழுதப்படவில்லை (RTO விதிப்படி வண்டி show room விட்டு வெளியே எடுத்து செல்லும் பொழுது நம்பர் இல்லாமல் எடுத்து செல்லக் கூடாது) என்னிடம் வாங்கிய extra fittings க்கான பணத்திற்கான items மாட்டபடவில்லை.கேட்டால் side stand, head light, indicated light extra என சொல்கிறார்கள்.
TVS நிர்வாகம் show room டீலர்களுக்கு ஒரு கஸ்டமருக்கு புது வண்டி டெலிவரி தரும்பொழுது தகுந்த முறையில் உகுந்தஅதேபோல் satisfactionஉடன் தருவதற்கான பயிற்சி தருவதில்லை போல் இருக்கிறது. அன்று எனக்கு அந்த அளவு அசிங்கத்தை அதாவது ஒரு இருட்டு பாதையில் வைத்து டெலிவரி எடுத்து கொள்ள அழைக்கிறார்கள், எனக்கு நேர்ந்த அவமானத்தால் எனக்கு வண்டியே வேண்டாம் என கூறிவிட்டு வந்துவிட்டேன், இப்பொழுது என் ஜோதிடர் அன்று வண்டி எடுக்கவில்லை என்றால் இனி எடுக்க வேண்டாம் என சொல்கிறார்.
நான் TVS நிர்வாத்திடம் இதன் வாயிலாக கேட்டுக்கொள்வது உங்களுடைய டீலர் மூலமாக அசிங்கப்பட்டு மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், தயவு கூர்ந்து எனக்கு டீலரிடம் நான் செலுத்திய பணத்தை வாங்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன்
அதேபோல் மற்றுமொரு விண்ணப்பம்;-
தயவுகூர்ந்து உங்கள் டீலருக்கு கஸ்டமருக்கு எவ்வாறு மரியாதை தரவேண்டும், ஒரு புது வண்டி டெலவரி தரும்பொழுது எவ்வாறு உகுந்த மரியாதையுடன் தரவேண்டும் என தகுந்த பயிற்சி யை தரும்படியும், மற்ற கம்பனி களில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என தெரிந்து கொள்ள டீலர்களை மற்ற கம்பனி show room களுக்கு அழைத்து சென்று காண்பிக்கும்படி மிகவும் தாழ்மையடன் கேட்டு கொள்கிறேன்.
இந்த பதிவிற்க்கு தகுந்த பதிலை TVS நிர்வாத்திடம் எதிர்பார்கிறேன்
மிக்க நன்றி
- தனஞ்ஜெயன்
[protected] Was this information helpful? |
Post your Comment