Vellore Corporation — Stagnation of drain water.

Website:rofu

மதிப்பிற்குரிய அய்யா.
நான் வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம்57 ஆவது வார்டு சந்தான ஈஸ்வரி கோயில் தெரு வில் 12A/1என்னிட்ட வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டின் பின்புற சுற்றுசுவரினையொட்டி ஒரு காலிமணை உள்ளது.கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த காலியிடத்தில் பக்கத்து வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி குட்டையாக உள்ளது. மேலூர் இந்த கழிவுநீரானது எனது வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஊறி எனது வீட்டின் தோட்டத்தில் சுமார் 10 அடி தூரம் வரை பரவி தேங்கியுள்ளது. இதன் காரணமாக பின்வரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. 1. எனது வீட்டின் சுற்றுச்சுவர் சரிந்து விழும் அபாயமும் உள்ளது.2. எனது தோட்டத்தில் வளர்ந்து வரும் மா கொய்யா வாழை மற்றும் தென்னம் செடிகள் அழுகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. 3.கழிவுநீர் தேக்கம் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது.4.கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. இது குறித்து ஏற்கனவே வேலூர் மாநகராட்சி 4ஆவது மண்டல அலுவலர்க்கு புகார் மனு ஒன்றை பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அமனுவானது 12/07/2021 அன்று பெறப்பட்டுள்ளது. மேலும் நான் 26/07/2021இது குறித்து நேரில் அனுகியதை தொடர்ந்து மாநகர சுகாதார அலுவலர் திரு முருகன் அவர்கள் 27/07/2021 அன்று நேரில் வந்து மேற்படி இடத்தினை பார்வையிட்டு சென்றுள்ளார்.இருப்பினும் இது குறித்து இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே எனது இம்மனுவினை ஏற்று மேற்படி இடத்தினை மீண்டும் ஆய்வு செய்து மேற்படி கழிவுநீரை அப்புறப்படுத்தவம்தொடர்ந்து�... தேங்காமலிருக்கவும் துரித நடவடக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பனிவுடண கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
பா கோபாலன்.
Was this information helpful?
No (0)
Yes (2)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint