அனுப்புநர்:
கிராம மக்கள்,
சக்கரக்கோட்டை
பஞ்சாயத்து,
இராமநாதபுரம்
மாவட்டம்-623504
பெறுநர்:
மனிதவள மேம்பாட்டுத் துறை,
பொருள்:
அவசர ஊர்தி வாகனங்களில் நடக்கும முறைகேடு.
�...⇄
மதிப்பிற்குரிய ஐயா, அம்மா
மாவட்டத்தில் அவசர ஊர்தி நன்றாக இயங்கி வருகிறது.ஆனால் அதில் ஒரு சில தவறுகள் நடைபெறுகிறது.
1.போலியான பெயர்களை கொண்டு கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை ஏற்றி செல்வதாக (8மணி முதல் 1வரை)பொய் கணக்கு காட்டுகிறார்கள்.அதனால் அந்த நேரத்தில் ஏற்படும் விபத்து மற்றும் பிரசவ வலியில் இருப்பவர்களை கொண்டு செல்ல அவசர ஊர்தி கிடைக்காததால் அவர்களே சொந்த வாகனங்களை பயன்படுத்த முற்படுவதால் உயிர்ச்சேதங்கள் அதிகம் ஏற்பட இது ஒரு பெரும் வாய்ப்பாக அமையும் சூழ்நிலை ஏற்படுகிறது.
2.உயிருக்கு போராடும் நிலையில் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் மிக குறைவான வேகத்தில் செல்கிறார்கள்.சிறிது வேகமாக செல்லுங்கள் என்று கூறும்போது அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் உடன் இருப்பவர் எங்களை குறைந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று எங்கள் உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள் என்று எங்களிடம் கூறுகிறார்கள்.ஏன் என்று கேட்டால் எங்களிடம் மைலேஜ் கணக்கு கேட்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.நாங்கள் அதை செய்யாவிட்டால் எங்களை வெகு தொலைவில் பணிக்கு அனுப்ப்படுவீர்கள் என்றும் கூறுகிறார்கள்.அதற்காகவே அவர்கள் ஊர்தியை குறைவான வேகத்தில் இயக்குகிறார்கள்.( குறைந்தது 100 கி.மீ சென்று வர நான்கில் இருந்து ஐந்து மணி நேரம் எடுத்துக் கொள்வதால் காப்பாற்ற பட வேண்டிய உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.)
3. அதுமட்டுமின்றி அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் அவருடன் பணியில் இருப்பவர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுகிறார்கள்.( Patient care record and milage record) களில் போலி கணக்கு காட்டுகிறார்கள்.
தயவு கூர்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
ஊர் பொதுமக்கள்.
�...⇄
GVK EMRI customer support has been notified about the posted complaint.
Apr 29, 2021
Updated by B Nageswaran பொருள்:
அவசர ஊர்தி வாகனங்களில் நடக்கும முறைகேடு