Address: | Salem, Tamil Nadu, 636001 |
#KPN_டிராவல்ஸ் அடாவடி அனுகுமுறை: கடந்த மாதம் 29 தேதி KPN டிராவல்ஸில் சென்னைக்கு செல்ல கோயம்பேடு வரை டிக்கெட் எடுத்து பயணம் செய்தேன், அப்போது பஸ்ஸின் டிரைவர் T.Nagar Parcel ஆபீஸில் நிறுத்தி இதற்கு மேல் இந்த பஸ் போகாது என்றார், நான் கோயம்பேடு டிக்கெட் எடுத்துள்ளேன் என சொன்ன பிறகு "ரோட்டின் அடுத்த பக்கத்திற்கு போ, வரும் ஏதேனும் ஒரு KPN பேருந்தில் ஏறி கோயம்பேடு போ" என ஒருமையில் விரட்டினார் அந்த பேருந்தின் டிரைவர்., நானும் அவரிடம் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அடுத்த பேருந்திற்காக அரை மணி நேரம் காத்திருந்து ஏறினால் சிறிது சென்று அடுத்த நிறுத்தத்தில் நாங்களும் கோயம்பேடு போக மாட்டோம் எனக்கூறி இறக்கிவிட்டு சென்றனர் இவ்வாறு நான் காலை 7 மணி மணியிலிருந்து அலைக்களிக்கப் பட்டேன் கோயம்பேடு சென்றடைய. என்னுடைய கேள்வி எல்லாம் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் உள்ள படித்த எனக்கே இந்த நிலை என்றால் படிக்காத பாமரர்களின் நிலை மிகவும் வருந்தத்தக்கதே! பேருந்தில் பயணிகளை திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதேனும் அவர்களை சரியான இடத்தில் சேர்க்கவும் பயணிகளும் மனிதர்கள் தான் என கற்று கொடுத்தால் நலம். KPN பேருந்தில் பயணம் சற்று கவனமா செல்லவும்.
Was this information helpful? |
Post your Comment