| Address: Madurai, Tamil Nadu, 625021 |
| Website: www.mkuniversity.org |
திருமதி.நளினி, the controller of examination office-ல்வேலைபார்க்கிறார், அவரிடம்இன்று 27/09/2016 காலை 11 மணி போல் டிகிரி மற்றும் மைக்கிரேசன் சர்டிபிகேட் விசயமாக விபரங்கள் கேட்டேன்.அவர் சொல்லியபடி dde போனேன், ஆனால் அது தவறான தகவல் என கூறி, நளினியிடமே அனுப்பினர்.மீண்டும், மீண்டும் அவரால் அலைகழிக்கப்பட்டு, அவரிடமே போனேன்.அவரின் அலட்சியப் போக்கு, மரியாதை இல்லாமல் பேசியது ஆகிய செயலால் மிகுந்த மன ஊளைச்சலுக்கு ஆளானேன்.நான் முயன்ற வேலையும் நடைபெறவில்லை.எனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வால், (நான் கொடுத்த பேப்பர்களை வாங்கிப் பார்த்து விட்டு தூக்கி என் முன்னால் எறிந்தார்.அதன் பின் தான் நான் ஏன் இப்படி தூக்கிப் போடுறீங்க மேடம், ஒரு மரியாதையில்லாமல் இப்படி செய்யாதீங்கன்னு சொன்னேன்.)
என் உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டது.படித்த, விபரமான எனக்கே இந்த நிலை என்றால், படிக்காத மற்றும் கிராமத்தில் இருந்து வருபவர்களின் நிலை என்னவாகும், இப்படிபட்ட ஊழியரின் தவறான வழிகாட்டுதல், அலைக்கழிக்கும் குணம் மாறணும். அந்த அலுவலக வாசலில் பலரும் நின்று கொண்டு தங்களின் வேலைக்காக காத்து இருக்கின்றனர்.வேலைப்பளு என்பது அனைவருக்கும் இருக்கும் என்பதை நன்கு அறிவேன்.ஆனாலும் அலுவலர்களை நம்பித் தான் நாங்கள் தேடி வருகிறோம்.இப்படி "தான் தோன்றித்"தனமான பதில்கள் எங்களை எவ்வளவு வேதனைப் படுத்தும் என்பதை அவர் உணர வேண்டும்.ஆனால் அதனை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அலுவலக வாசலில் நின்று கடலை மிட்டாய் தின்று கொண்டு ஒரு ஆணுடன் பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறார்.இவரின் இந்த செயலுக்கு அவருடன் பணிபுரிபவர்கள், "மன்னிப்பு" கேட்கிறார்கள்.ஆனால், நளினி அவர்கள் ஒரு மரியாதையும் இல்லாமல் இருந்தார்.அவருக்கு நல்ல புத்தி கிடைக்கணும்.என்னை போல் இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது, எனது தாழ்மையான வேண்டுகோள்.
மிகுந்த மன ஊளைச்சலுடன்,
திருமதி மீனாட்சி சேது.
Madurai Kamaraj University customer support has been notified about the posted complaint.
Nov 26, 2016
Devashri pandya's response I have no given my original my m.s.c degree cariteficat.