St Courier — Complaint against ST Courier, Valparai | |||
எனக்கு மதுரையிலிருந்து 05.08.2021 அன்று கொரியர் அனுப்பப்பட்டது ஆனால் ஆன்லைனில் பார்க்கும் பொழுது 07.08.2021 அன்று Out for delivery என்று வந்தது. அதனால் நான் [protected] என்ற எண்ணுக்கு 09.08.2021 அன்று போன் செய்து கேட்கும் பொழுது " இன்று மாலை அல்லது நாளை வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். அதனால் நான் 10.08.2021 இன்று 12.30 மணியளவில் வால்பாறை ST COURIER அலுவலகத்திற்கு சென்ற பொழுது அங்கு யாரும் இல்லை கதவு திறந்து இருந்தது. நான் அங்கிருந்த [protected] என்ற போன் நம்பருக்கு போன் செய்து கேட்ட பொழுது " .நீங்க நான் சொன்னாதான் கேட்கனும், உங்களுக்கு அப்படி ஒரு கொரியர் வரவே இல்லை என்றும், உங்களுக்கு யார் சொன்னது உங்களுக்கு கொரியர் வந்துள்ளது என்று, ஆன்லைனில் அப்படிதான் போடுவார்கள் அதற்காக நீங்கள் போன் செய்து கேட்க கூடாது என்றும், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறினார் மற்றும் மிகவும் கடினமான வார்த்தைகளால் பேசினார். கஸ்டமர் ஆகிய எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு அனுப்பியுள்ள கொரியரும் எனக்கு கிடைக்கவில்லை மற்றும் இவர் கஸ்டமர் ஆகிய என்னிடம் நடந்து கொண்ட விதமும் திருப்திகரமாக இல்லை. தயவு செய்து ஒரு தீர்வு காணும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி Was this information helpful? | |||
Add a Comment | |||
7%
Complaints
1459
Pending
0
Resolved
101
View all 1459 ST Courier reviews & complaints
+91 44 2266 6666
199, Hariyan Street, C.Pallavaram, Chennai, Tamil Nadu, India - 600043
View all ST Courier contact information
Post your Comment