Tamil Nadu Electricity Board [TNEB] — Complaint about area lineman
V
Vinoth S Sarojini
Address:
629702
என் பெயர் ஜெயகுமார்.நான் கன்னியாகுமரி மாவட்டதில் சின்னமுட்டம் என்ற கிராமத்தில் 15-91/c என்ற எண்ணில் ஒரு சிறு வெல்டிங் பட்டறை வைத்துள்ளேன்.என்னுடைய மின் இணைப்பு எண் 1277 ஆகும்.நான் அரசு அனுமதியுடன் எனது பட்டறையை கடந்த 8 வருடங்களாக நடத்தி வருகிறேன்.16/06/2017 அன்று மாலை 3 மணியளவில் உயர் மின்னழுத்த கம்பியானது என்னுடைய மின் இணைப்பின் மீது விழுந்து நியூட்டர் இணைப்பு துண்டானது..அதை சரி செய்வதற்காக எங்கள் பகுதி lineman அனுகினோம்.அவருடைய பெயர் ஜோதி.அவரை அழைத்து வெகுநேரமாகியும் வரவில்லை.எங்களுடைய வேலை முழுவதும் பாதிப்புள்ளானது..பின்னர் அவர் இரவு எட்டு மணியளவில் இரண்டு நபர்களுடன் வந்தார்.அவர்கள் யார் என்று தெரியவில்லை.வந்த பிறகு நான் நடந்தவற்றை அவரிடம் விவரித்தேன்.ஆனால் எங்களுடைய வாதத்தை ஏற்க மறுத்தார்.மேலும் அதை சரி செய்வதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றார்.நான் என்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்றேன்.அதற்கு அவர் தகாத வார்த்தைகளால் என் மனம் புண்படும்படி பேசினார்.."உனக்கு வேலை பார்க்க முடியாது.நீ யாரிடம் வேண்டுமென்றாலும் புகார் கொடு ஒருத்தனும் என்னை புடுங்க மாட்டான்" என்று கூறி சென்று விட்டார்..நான் இப்போது வேலை ஒன்றும் செய்ய இயலாமல் உள்ளேன்..என்னை நம்பி என்னுடன் மூன்று நபர்கள் வேலை பார்கிறார்கள்.அவர்களுக்கும் இந்த காரணங்காளால் வேலை கொடுக்க இயலவில்லை..ஆதலால் தயவு கூர்ந்து என்னுடைய புகார் மனுவை ஏற்று மின் இணைப்பை சரி செய்து தரும்படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்..மேலும் அந்த நபர் மீது பல புகார்கள் கூறபடுகின்றன.அவை அனைத்தையும் விசாரித்து அவர் மீது துறை ரீதியாக தண்டனை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்..
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment