Tamil Nadu Electricity Board [TNEB] — thandi maram sainthu vittathu
P
periyar chinnadurai
from New Delhi, Delhi
Address:
KALATHUR, 630108
அய்யா வணக்கம்
எங்கள் ஊர் களத்தூர் கிராமம் தேவகோட்டை தாலுகா சிவகங்கை மாவட்டம் எனது பெயர் பெரியார் சின்னதுரை எங்கள் ஊருக்கு 16 எண் பேருந்து இயக்கப்படுகிறது கடந்த 10 நாட்களாக பேருந்து எங்கள் ஊருக்கு வரவில்லை அதற்கு காரணமாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சொல்லும் கரணம் எங்கள் ஊருக்கு வரும் வழியில் உள்ள வண்ணன்வயல் என்ற பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் மின்சார கம்பம் சாலை ஓரத்தில் இருப்பதால் தற்போது பெய்த மழையால் அந்த கம்பம் சாலை பக்கமாக சாய்ந்து நிற்பதால் பேருந்தில் உரசி சேதம் ஏற்படும் என்பதால் எங்களால் இயக்க முடியாது என்று கூறி எங்கள் ஊரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்தை நிருத்தி விடுகின்றனர் இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் என்று அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் அதுவும் மாலை வேளையில் பெருந் விட்டு இறங்கி நடந்து வருவது மிகவும் சிரமமாக உள்ளது இந்த மின் தடம் சாக்கோட்டை அலுவலகத்தில் இருந்து வருகிறதா இல்லை தேவகோட்டை சரகத்தில் இருந்து வருகிறதா என்று தெரியவில்லை ஏனென்றால் தேவகோட்டை அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை இல்லை சாக்கோட்டை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு இணைக்கப்படவில்லை எனவே இந்த கோரிக்கையை உடனடியாக சரிசெய்து தரும்படி மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
களத்தூர் கிராம மக்கள்
தேவகோட்டை தாலுகா
சிவகங்கை மாவட்டம்
(பெரியார் சின்னதுரை [protected])
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment