Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Luggage for government schools free boot.

Address:TNSTC COONOOR, NILGIRI DISTRICT

நான் நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்துக்கு அருகில் உள்ள பில்லூர்மட்டடம் பகுதியில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பணி புரிந்து வருகிறேன். கடந்த செப்டெம்பர் 20ம் தேதி (2021 ஆம் வருடம்) தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச காலுறைகளை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் பொருட்டு குன்னூர் வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து காலுறைகளை பெற்று 3.15 மணிஅளவில் இலவச காலுறைகள் அடங்கிய என்னுடைய கட்டைப் பையுடன் ஆர்ச்செடின் செல்லும் பக்காசூரன் மலைக்காட்சி பேருந்தில் ஏறினேன். நடத்துனர் அவர்கள் பயணச்சீட்டு எடுக்க வரும்போது என்னுடைய சிறிய விலையில்லா பொருட்கள் அடங்கிய பைக்கும் சேர்த்து லக்கேஜ் டிக்கெட் எடுக்க சொன்னார். இது ஒரு சிறிய அளவிலான பை இதற்கு ஏன் கணக்கில் எடுக்க வேண்டும் அதுவும் இல்லாமல் இது தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருள் இதற்கு ஏன் லக்கேஜ் எடுக்க வேண்டும் என நான் கேட்டபோது. கண்டக்டர் அவர்களும் டிரைவர் அவர்களும் என்னை பேருந்தில் இருந்து இறங்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். மழை நேரத்தில் என்னை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு விடுவேன் என்று சொன்னதும் தமிழக அரசு இலவசமாக வழங்கும் பொருள்களுக்கு அரசு பேருந்திலேயே லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது டன் பயணிகள் முன் நான் ஏதோ குற்றம் செய்தது போல் என்னை திட்டியதும் எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளது. ஓட்டுநர் பெயர் ஸ்டீபன் (சீனியர் டிரைவர்) நடத்துனர் பெயர் தெரியவில்லை. பேருந்தில் விலையில்லா பொருட்களை சிறிய அளவிலான பையில் எடுத்துச் செல்வதை கூட லக்கேஜ் டிக்கெட் வாங்க வேண்டுமா. குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்கள் அரசு பேருந்தில் ஏன் இலவசமாக அனுமதிக்கக் கூடாது. இதற்காக என்னிடம் தகராறு செய்த ஓட்டுநர் நடத்துநர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tamil Nadu State Transport Corporation [TNSTC]
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    8%
    Complaints
    4184
    Pending
    0
    Resolved
    324
    Tamil Nadu State Transport Corporation [TNSTC] Address
    Head Office, Thiruvalluvar House, Pallavan Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Tamil Nadu State Transport Corporation [TNSTC] contact information