| Address: Chennai, Tamil Nadu, 600102 |
அனுப்புநர்
தமிழ்வழி பயின்ற விண்ணப்பதாரர்கள்,
தொகுதி -1 (Cse-i)தேர்வு,
தமிழ்நாடு.
பெறுநர்,
தலைவர் அவர்கள்,
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வு ஆணையம்,
சென்னை -3
ஐயா,
பொருள் :தமிழ்வழி பயின்ற விண்ணப்பதாரர்களுக்கானஉரிமை�...⇄ - மீட்டுதருதல் - தொடர்பாக -
தமிழ்நாடுஅரசு தமிழ்வழி பயின்ற மாணவர்களுக்கு அனைத்து வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்கும்பொருட்டு, தமிழ்நாடுசட்டம்.எண். 40/2010 மூலம் 20 % இடஒதுக்கீடுவழங்கியது.
இந்த சட்டத்தின் நோக்கமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள், தனியார் வேலை வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை ஈடுகட்ட அவர்களுக்கு மாநில அரசுப்பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்குவது.
போதிய வேலை வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தமிழ் வழியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பயில்வதற்கான ஆர்வம் இல்லை என்பதால்தான் தமிழ் வழியில் பயில்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் விதி 14 நடைமுறைப்படுத்த இந்த சட்டம் இன்றியமையாதது என குறிப்பிடப்பட்டுலுள்ளது. சமமான வாய்ப்பு இல்லாத சூழலில், சமவாய்ப்பு உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஆனால் மேற்கண்ட முன்னுரிமை பின்வரும் பிரிவுவிண்ணப்பதாரர்களால் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுகிறது.
1. Sslc, hsc, degree போன்ற படிப்புகளை ஆங்கில வழியில் பயின்று தற்போது இந்த இடஒதுக்கீடை மறைமுகமாக அடைவதற்கு பட்டபடிப்பை மட்டும் மீண்டும் தமிழ்வழியில் பயில்கிறார்கள்.
2. Sslc, hsc போன்ற படிப்புகளை ஆங்கிலவழியில் பயின்று பட்டபடிப்பு மட்டும் தமிழ் வழியில்பயில்கிறார்கள்.
மேற்கண்ட இரண்டு பிரிவு விண்ணப்பத்தாரர்களும் தொகுதி - 1 க்கான முதன்மை தேர்வினை ஆங்கில வழியில் எழுதி, தமிழ்வழியில் பயின்றமைக்கான இடஒதுக்கீடை மறைமுகமாக அடைகின்றனர். தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் என்றநோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தசட்டமானது ஆங்கில வழியில் பயின்று, தேர்வினையும் ஆங்கில வழியில் எழுதுபவர்களுக்கு தரப்படுகிறது.
தொகுதி -1 க்கான அறிவிக்கையில், கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டம் படித்து இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்பினை 10+2+3 என்ற அடிப்பைடையில் பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 12 வருட பள்ளிபடிப்பு, மற்றும் பட்ட படிப்பினை தமிழ்வழியில் பயின்று, தேர்வினையும் தமிழ்வழியில் எழுதும் மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய இந்த முன்னுரிமை, 12 வருடம் ஆங்கில வழியில் பயின்று, தேர்வினையும் ஆங்கில வழியில் எழுதுபவர்களால் மறைமுகமாக தட்டி பறிக்கப்படுகிறது. இதன்மூலம் இந்தசட்டத்தின் நோக்கமே வீணாகிவிடுகிறது.
ஆனால் இந்த முன்னுரிமையை ஆங்கில வழியில் 12 வருட பள்ளி படிப்பையும், தேர்வினையும் ஆங்கில வழியில் எழுதி, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் உரிமையை தட்டிப் பறிக்கிறார்கள்.
இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு கொண்டுவரப்பட்ட இந்த முன்னுரிமை சட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகிறது.
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கடந்த கால தொகுதி -1 (Group-i service) முடிவினைக் கணக்கில் எடுத்து கொண்டால் ஆங்கில வழியில் 12 வருட பள்ளி படிப்பு மற்றும் முதன்மை தேர்வினை ஆங்கில வழியில் எழுதிய மாணவர்களே இந்த முன்னுரிமையை மறைமுகமாக தட்டிப் பறித்துள்ளனர்.
தமிழ் வழியில் 12 வருட பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பினை படித்து முதன்மை தேர்வினையும் தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றவர்களின் சதவீதம் மிக மிக குறைவு.
மேற்கண்ட கோரிக்கையை பரிசீலித்து, தமிழ் வழி மாணவர்களின் உரிமையை மீட்டு, இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேற உரிய நடவடிக்கை எடுக்கும்படி தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
சென்னை உண்மையுள்ள,
26.05.2017 தமிழ்வழி விண்ணப்பதாரர்கள்
DailyThanthi customer support has been notified about the posted complaint.
Near Government Hospital The South side traffic signal was broken and not repaired even after 4 days and it is so convenient for all the people while all the other 3signals are working in a four corner Road