திரு. ஐயா,
வணக்கம்...!
எங்கள் ஊர் பெயர் இடையாத்தி பாலம் (குப்பன் தெரு), பேராவூரணி ஒன்றியம், சுமார் 50 குடும்பங்களை கொண்ட எங்கள் ஊர் நவம்பர் 15 அன்று வந்த கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டது. இன்று வரை 30% மின்சார சரிசெய்யும் பணிகள் தான் நடக்கிறது மேலும் எந்த ஒரு வேகமான பணிகளும் நடைபெறவில்லை.
எங்கள் ஊர் இடையாத்தி பாலம் (குப்பன் தெரு), பேராவூரணி ஒன்றியத்தின் கடைசியாகவும், அதன் பின் கறம்பக்குடி ஒன்றியத்தின் துவக்கமாகவும் உள்ளதால், யாரும் சரியாக கண்டுகொள்ளவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் to பட்டுக்கோட்டை செல்லும் ஒரு முக்கியமான மற்றும் சிறந்த வழித்தடங்களுடனும், போக்குவரத்து சீர்செய்யப்பட்டு வெகு நாட்கள் ஆகியும் பாதி அளவே மின் தடத்தை சரி செய்துள்ளனர் (டிசம்பர் 5 அன்று வரை).
ஆனால் எங்கள் பக்கத்துக்கு கிராமம் முழுமையாக சீர்செய்யப்பட்டு விட்டன, காரணம் எங்கள் ஊரில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை.
அதிகாரிகளிடம் கேட்ட போது ஊரில் இருக்கும் பெரிய நபர்களுக்கு சாதகமான முறையிலும், அவர்கள் பணிகளை மெதுவாகவே செய்கின்றனர்.
ஒரு சரியான வழித்தடம் கொண்ட ஒரு கிராமத்திற்கு மின் வழி தடத்தை சரி செய்ய இந்தனை நாட்கள் எடுத்துக்கொண்டு மற்றவருக்கு சாதகமாக பணி செய்யும் நம் அரசு பணியாளர்களை கண்டித்தும, சரியான முறையில் விரைந்து மின் இணைப்புகளை சரி செய்து தர தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் எங்கள் முழு கிராம மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இடையாத்தி பாலம் (குப்பன் தெரு), பேராவூரணி ஒன்றியம்
வட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு மின் இணைப்பகத்திற்கு உட்பட்டது.
கண்ணீருடன் வாழ்வாதாரத்தை இழந்து இருட்டில் வாழும் எங்களுக்கு கருணை காட்டுங்கள், எங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொடுங்கள்.
இப்படிக்கு
இடையாத்தி பாலம் (குப்பன் தெரு)
கிராம மக்கள்.
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
My consumer number is [protected]
Mr k suppaiya nadar is using his house electricity in general store also using lights/refrigerator in his shop so, please take the step of action on electricity theft.