Viveks India — Defective Television received with Scratches - Viveks Tambaram

Address:Chennai, Tamil Nadu, 603202
Website:www.viveks.com

ர.ரங்கநாதன் என்ற நான் Vivkeks Tambaram கடையில் கடந்த 18.6.2017 அன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் எங்களுக்கு பிடித்தமான தொலைக்காட்சியை வாங்க விருப்பப்பட்டு குடும்பத்துடன் உங்கள் கடைக்கு வந்தோம்.

எங்களுக்கு இதைப்பற்றி Viveks நிறுவனத்தில் பணிபுரிபவர் (பெயர் தெரியவில்லை - செல் போன் எண் [protected]) என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னதின் பேரில் நாங்கள் விருப்பப்பட்டு சாம்சங் ஸ்மார்ட் 32 அங்குலம் தொலைக்காட்சியை வாங்கினோம். அவர் சொன்ன மதிப்பின்படி ரூபாய் 35, 000/- ரொக்க பணமாக செலுத்தினோம்.

டெலிவரி என்று எந்த தொகையும் செலுத்த வேண்டாம் என்று சொன்னார். இதற்காக உங்கள் கடையில் இருந்து நாங்கள் பெற்று கொண்ட ஆர்டர்-கம்-ரிசிப்ட் என்ற சீட்டையும் நகல் எடுத்து இத்துடன் இணைத்துள்ளோம்.

நாங்கள் வாரண்ட்டி கார்டு கேட்டோம்.வாரண்ட்டி ஒரு வருடம் என்றும், இந்த சீட்டு தான் வாரண்ட்டி என்றும் சொன்னார்கள்.

19.6.2017 அன்று உங்கள் கடையில் இருந்து எங்களுக்கு தொலைக்காட்சியைப் பற்றி விவரித்த கடை ஊழியர் (செல் போன் எண் [protected]) வீட்டிற்கு வந்து தொலைக்காட்சியை வைத்து சென்றார். தொலைக்காட்சி பெட்டியின் விலையில் ரூபாய் 200/- குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி, அந்த தொகையை எங்களிடம் பெற்றுக்கொண்டார். அதற்கு அவர் எந்த ஒரு ரசீதும் வழங்கவில்லை.

20.6.2017 அன்று சாம்சங் தொழில் நுட்பவியலாளர் வந்து தொலைக்காட்சியை பொருத்தி சென்றார். அப்போது Samsung ஊழியர் தொலைக்காட்சியின் இடது புறம் ஒட்டப்பட்டிருந்த Samsung logo ஸ்டிக்கரை நீக்கினார். ஸ்டிக்கரை நீக்கியபின், அதில் ஒரு செல்லோடேப் (Cello tape) ஒட்டப்பட்டு இருந்தது. அந்த செல்லோடேப்பினுள் கீறல்கள் இருப்பதை 27.06.2017 அன்று தற்செயலாக கவனித்தோம். தொலைக்காட்சியில் உள்ள கீறலை மறைப்பதற்காகவே செல்லோடேப் ஒட்டப்பட்டிருந்தது என்பதை உணர்ந்தோம்.

இதன்படி தொலைக்காட்சியை பற்றி முன்பு எங்களிடம் விவரித்த உங்கள் Viveks கடை ஊழியரிடம் (27.06.2017) விசாரித்தோம் (செல் போன் எண் [protected]). ஆனால் அவர் அந்த லோகோ ஸ்டிக்கர் தான் வாரண்ட்டி என்றும், அந்த ஸ்டிக்கரை பிரிக்க கூடாது என்று Samsung manual கார்டில் எழுதப்பட்டிருப்பதாக கூறினார். இது முற்றிலும் தவறான செய்தி என்பதை Samsung வாடிக்கையாளர் சேவை மூலம் பின்பு உறுதி செய்தோம். மேலும் அவ்விதமாக எந்த ஒரு செல்லோடேப்பும் தொலைக்காட்சியில் ஓட்ட பட்டிருக்காது என்பதை சாம்சங் சேவை மைய அதிகாரி உறுதி செய்தார்.

மேலும் உங்கள் Viveks கடை ஊழியரிடம் பேசுகையில் ”கீறல் மட்டும் தானே, தொலைக்காட்சி நன்றாக தானே வேலை செய்கிறது” என்று அலட்சியமாக பதில் அளித்தார்.

பிறகு Viveks கடையில் மேலாளர் என்று அறிமுகப்படுத்தப்பட்ட திரு.ரூபனுடன் தொலைபேசியில் குறைகளை விவரித்தோம். தொலைக்காட்சி சீரியல் எண் சாம்சங் பதிவு செய்து விட்டதால் எங்களை Samsung வாடிக்கையாளர் சேவையில் முறையிடுமாறு கூறினார் . அதன் பேரில் நாங்களும் வாடிக்கையாளர் சேவையில் பதிவு செய்தோம் (பதிவு எண் [protected] - [protected]).

Samsung தொழில் நுட்பவியலாளர் 1.7.2017 அன்று வந்து தொலைக்காட்சியை பார்த்து புகை படம் எடுத்து சென்றார். சாம்சங் பொறுத்த வரை cello tape தொலைக்காட்சியில் ஒட்டி இருக்காது என்பதை அவரும் உறுதி செய்தார்.

1.7.2017 அன்று என் சார்பில் என் மருமகன் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் Viveks கடைக்கு நேரில் வந்து திரு.ரூபனிடம் நேரில் சந்தித்து மீண்டும் விவரித்தார். அச்சமயம் எங்களுக்கு தொலைக்காட்சி குறைபாட்டிற்கு பதிலாக அன்பளிப்பு ஏதாவது பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.. ஆனால் எங்களுக்கு மாற்று தொலைக்காட்சிதான் வேண்டும் என்றும் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். பிறகு தான் சாம்சங் டெலிவரி மேனஜருடன் பேசப்போவதாகவும், எங்களை 3.7.2017 அன்று தொலைபேசியில் அழைக்குமாறு கூறினீர்கள்.

03.07.2017 அன்று சுமார் மதியம் 1.30 மணி அளவில் திரு.ரூபனை தொடர்பு கொண்டோம். சாம்சங் நிறுவனத்தில் கீறல்களுக்கு மாற்று தொலைக்காட்சி எங்களுக்கு தர மறுத்திருப்பதை கூறினோம். அவர் விசாரித்துவிட்டு சிறுது நேரம் கழித்து அழைப்பதாக கூறினார் . ஆனால் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் மீண்டும் வரவில்லை. நாங்கள் பல முறை உங்களை தொடர்பு கொள்ள முயன்ற போதும், எங்கள் தொலைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை.

Vivkes கடையில் நாங்கள் வாங்கிய Samsung Smart LED 32 inch தொலைக்காட்சியில் உள்ள கீறல்களுக்கும் அதன் மேல் ஒட்டப்பட்டிருந்த செலோ டேப்பிற்கும் அவர்கள் பொறுப்பேற்று எங்களுக்கு உரிய விளக்கத்தையும் மாற்று தொலைக்காட்சியும் வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
+5 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Viveks India customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Comments

The Viveks brand is worst TV, is not support mkv format videos and the picture quality is very bad... Worst customer service.. No one buy Viveks TV...
Connect to Viveks's reply, Jul 26, 2017
We regret the inconvenience caused. Please share your Billing details or complaint ID at customercare.manager@viveks.com We will get back to you at the earliest.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Viveks India
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    41%
    Complaints
    308
    Pending
    0
    Resolved
    125
    Viveks India Phone
    +91 44 4213 1616 [Customer Care]
    Viveks India Address
    150, (New 68), 2nd Floor, Luz Church Road, Mylapore, Chennai, Tamil Nadu, India - 600004
    View all Viveks India contact information