ஐயா வணக்கம்.கீழ்கண்ட நபர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா, புளியங்குடியில் சொ. வேலுச்சாமி த/பெ சொள்ளமாடன், ரெங்க கருப்பன் தெருவில் வசித்து வரும் நிலையில், இவர் சிந்தாமணி கிராமம் காடுவெட்டி பகுதியில் புதியதாக கிணறு வெட்டி மின்சாரம் சர்வீஸ் S.No:5564619 இழுத்து உள்ளார்.சுமார் 2ஏக்கர் இடத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் பொது கிணற்றில் 2வாரத்திற்கு ஒரு முறை மட்டும மே முறை வரும்.அதனால் இவர் தினமும் செய்வதற்க்கு வசதியாக, முறையாக சாட்டர் வைத்து நீர் பாசனம் செய்தால், அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டும்.அதனால் அவருடைய மகன் வேலுச்சாமி என்பவர் லயனை மாற்றி அவருடைய தூண்டுதலின் பெயரில் இவர் தன்னுடைய மின்சார போர்டில் லயனை(line)மாற்றி மீட்டர் ஓடாமால் இரவு, மற்றும் பகல் நேரத்தில் ஓயரை தரையில் போட்டு நீர் பாசனம் செய்த ஓயரை சுருட்டி வைத்து கொண்டு இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார்.இதனால் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், மக்களுக்கும், காட்டில் உள்ள விலங்குகளுக்கும் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டால் அதற்கு இவரே பொறுப்பாவர்.மேலும் இந்த நபர் கணக்கெடுக்கும் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு இவர் துணிச்சலாக செய்து வருகிறார்.அன்னைத்து போட்டோக்களும் எங்களிடம் உள்ளது. இவரை போல பலரும் பின் பற்ற வழி உண்டு .எனவே இதை உடனே விசாரனை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: மேற்கண்ட நபர் நீர் பாசனம் செய்து பின்பு, ஓயரை சுருட்டி வைத்து கொள்கிறார்.அதிகாரி வந்தால் கேள்வி கேட்டால் அவர்களை இவர்கள்பணத்தை வைத்து சரிசெய்து கொண்டு இவர்கள் துணிச்சலாக நீர் பாசனம் செய்து வருகிறார். எந்த இழப்பு ஏற்பட்டாலும் அதற்கு அவரும், அரசும் முழு பொறுப்பாகும்.
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.