| Address: Gandhinagar 2 udumalpet |
அனுப்புனர்,
D. மகேஸ்வரி
ஸ்ரீ லக்ஷ்மிதேவிபிளேட்ஸ் & காப்ஸ்
36 காந்திநகர் 2' வீதி உடுமலை
பெருநர்,
மின்சார வாரிய மேலாளர் அவர்கள் உடுமலைப்பேட்டை திருப்பூர்.
பொருள்,
மின்சார பயன்பாடு மற்றும் பயனீட்டு தொகை பற்றி,
ஐயா,
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005
________________________________________
நான் கேட்கும் கீழ் கண்ட தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம்2005 சட்டப்பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ள விபரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அல்ல, என்பதுடன் நான் அறிந்த வகையில் இது தங்களது அலுவலகம் சம்பந்தப்பட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மின்சாரம் பயன்பாடு மற்றும் அதற்கு உண்டான தொகை எவ்வாறு கணக்கிட்டு வசூல் செய்யப்படுகிறது என்பதனயும்
தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி,
உங்கள் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட காந்திநகர்[protected]. என்ற மின் இணைப்பின் கடந்த ஆறு மாத கால மின்சார பயன்பாடு மற்றும் அதற்குண்டான முழு பயன் பாட்டுதொகை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதையும், அதை எந்த தேதியில் கணக்கிடப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
2)
மேலும் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு தொகை வசூல் செய்கிறீர்கள், வீடுகள் என்றால் எவ்வளவு என்றும் சிறு தொழிற்சாலைகள் என்றால் எவ்வளவு பயன்பாட்டுத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பதனையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
3)
கடந்த ஆறு மாத கொராணா காலங்களில்[protected] இந்த மின் இணைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சார அளவு மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும், தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
4)
மேலும் எனது தொழிற்சாலை கொரானா காலங்களில் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.அப்பொழுது நாங்கள் மின்சாரம் பயன்படுத்தாத காலகட்டத்தில் நீங்கள் எவ்வாறு மின்சார அளவை கணக்கிட்டு தொகையினை வசூல் செய்தீர்கள் என்பதனையும் தெரியப்படுத்தவும்.
5)
[protected] இந்த மின் இணைப்பு எண்ணில் குண்டான பயன்படுத்திய மின்சார அளவிற்கு மட்டும் பணம் வசூல் செய்து உள்ளீர்களா இல்லை அதற்கு முந்தைய மாதங்களில் கணக்கிடப்பட்ட மின்சார அளவைக் கொண்டு அதே கட்டணம் வசூல் செய்து உள்ளீர்களா என்பதனையும் தெரியப்படுத்துமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு D. மகேஸ்வரி
ஸ்ரீ லக்ஷ்மிதேவிபிளேட்ஸ் & காப்ஸ்
36 காந்திநகர் 2' வீதி
உடுமலைப்பேட்டை.
நாள்:
இடம்:
அலைபேசி எண்கள்: [protected].[protected].
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Please give me a quick reply