| Address: Coimbatore, Tamil Nadu, 641062 |
மதிப்புக்குரிய அய்யா,
வணக்கம்.
நான்,
N சக்திவேல்
1/158 மாரியம்மன் கோவில் வீதி
சின்னியம்பாளையம் (Po)
கோயமுத்தூர் - 641 062
மொபைல்: [protected]
வருத்தத்தோடு எழுதிக் கொள்ளும் மடல்.
நான், தங்களின் அங்கீகாரம் பெற்ற விற்பனை ஏஜென்சியான,
M/s. சக்திசாரதா எண்டர்பிரைசஸ்
எல்எல்பி, 1045, திருச்சி ரோடு, ஒலம்பஸ், ராமநாதபுரம், கோயமுத்தூர்-641 045
அவர்களிடம் ஒரு டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் ஸ்கூட்டரை கடந்த
[protected] அன்று ரூபாய் 71, 750/- (சிங்கிள் பேமெண்ட்)கொடுத்து விலைக்கு வாங்கினேன். அதன் இன்வாய்ஸ் நம்பர்: 201449.
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்: tn37db 1917
கடந்த[protected] அன்று, கடும் மழையில், மேற்படி வண்டியை ஒரு குழியில் விட்டதில் வண்டி கீழே வலது பக்கமாக விழுந்து விட்டதில் வண்டியின் வலது புற பேனல், முன்புற பேனல்கள் என்று scratches ஆகிவிட்டன. முன்புற பாதுகாப்பு பைப்புகளின் ஸ்க்ரூக்கள் விலகிவிட்டன. முன்புற பேனல் பிட்டிங்ஸ் விலகி விட்டது. அதோடு இடது பக்கம் லேசாக இழுக்கவும் செய்தது. உடனே மறுநாள்[protected] அன்று மேற்படி நிறுவனத்தில், மேற்படி குறைகளைக் கூறி, பழுது நீக்கித்தருமாறு கோரி சர்வீசுக்கு விட்டேன்.
அப்போது, திரு. நவீன்குமார், சர்வீஸ் அட்வைசர் மற்றும் திரு. சுரேஷ் சர்வீஸ் மேனேஜர் இருவரும், 'ஒரு பக்கம் இழுப்பதை சரி செய்து விடலாம், ஆனால், scratches மீது பெயிண்ட் செய்ய முடியாது, நேச்சர் ஆக வராது, வேண்டுமானால் புதிய பேனல் வாங்கிக் கொள்ளுங்கள், ரூபாய்.5500/- காஸ்ட் ஆகும்' என்று சொன்னார்கள். 'சரி, பார்க்கலாம், நீங்கள் முதலில் சர்வீஸ் செய்து தாருங்கள்' (Paid service) என்று சொல்லிவிட்டு வந்தேன்.
பின்னர்[protected] அன்று வண்டியை திரும்ப எடுக்கச் சென்றேன். முன்புற பேனல் சரியாக பிட் செய்யப்படவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, 'அதனுடைய காடிகள் உடைந்து விட்டன, புது பேனல் வாங்கிப் போட்டால்தான் கரெக்ட் ஆகப் பிட்டாகும்' என்றார்கள். 'சரி, ஓட்டிப் பார்த்துவிட்டு வருகிறேன்' என்று வண்டியை ஒட்டிப் பார்த்தால், மறுபடியும் இடது பக்கம் இழுத்தது.
அந்தக் குறை சரி செய்யப்படவில்லை.
நான் மறுபடியும் திரு.சுரேஷ், சர்வீஸ் மேனேஜர் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்லி, 'இடது பக்கம் இழுப்பதை சரி செய்யுங்கள், அத்துடன், 'புதிய பேனல்கள்' போட்டு விடுங்கள்' என்றேன். அதற்கு அவர், 'நான் புதிய பேனல்களுக்கு tvs க்கு ஆர்டர் போட்டு விடுகிறேன், வந்தவுடன் வண்டியைக் கொண்டு வாருங்கள்' என்றார். சில நாட்கள் தாமத்திற்குப் பின், 'பேனல்கள் வந்து விட்டது, வரும்[protected] அன்று வண்டியை கொண்டு வந்து
விட்டு விடுங்கள்' என்று போனில் சொன்னார்.
அவர் (திரு. சுரேஷ்) சொன்னபடியே, நான்[protected]
அன்று மேற்படி எனது ஸ்கூட்டரை, சர்வீஸ் அட்வைசர் திரு. நவீன்குமார் அவர்களிடம் கொண்டு சென்று விட்டேன். ஜாப் கார்டு நம்பர்: 216359 (போட்டோ இணைத்துள்ளேன்) அவர்,
'[protected] அன்று 'எல்லாம்' ரெடியாகிவிடும், வந்து எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்.
ஆனால், அன்று நான் வண்டியை விட்ட[protected] முதல் இந்த
[protected] வரை, 10 நாட்களாக, எப்போது போன் பண்ணிக் கேட்டாலும், 'இன்று, நாளை' என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள், திரு.சுரேஷ் அவர்களும், திரு.நவீன்குமார் அவர்களும்.
எனது வண்டியின் கதி என்ன ஆனது என்றே எனக்குத் தெரியவில்லை. அவிநாசி ரோட்டில் வசிக்கும் நான், எனக்கு பக்கத்தில் உள்ள பீளமேடு சக்திசாரதாவில் வண்டி எடுக்காமல், திருச்சி ரோடு சக்திசாரதாவில் வண்டி எடுக்கக் காரணமே, ஷோரூம் மேனேஜர் திரு. செந்தில் அவர்கள்தான். ஆனால் அவரைக் கேட்டாலோ 'சர்வீஸ் செக்சனில் என் பேச்சை மதிப்பதில்லை' என்கிறார்.
நான் தங்களிடம் கேட்பதெல்லாம், 'என் வண்டியின் கதி என்ன? அது என்னதான் ஆனது? புதிய பேனல்கள் மாற்ற இவ்வளவு நாளா? இது நியாயமா? புகழ் பெற்ற டிவிஎஸ் கம்பனி இப்படிச் செய்யலாமா?'
தயை கூர்ந்து, மேற்படி நிறுவனத்தில் இருந்து என் வண்டியை மீட்டுத் தாருங்கள் என்று தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
N. சக்திவேல்
இணைப்பு: ஜாப் கார்டு (Acknowledgement)
TVS Motor Company customer support has been notified about the posted complaint.