| Address: Tirunelveli, Tamil Nadu |
நான் கடந்த 05/03/2019 அன்று நெல்லை, தென்காசி ஆதி மாருதியில் மாருதி ஈகோ வாகனம் வாங்கியுள்ளேன்.வண்டி டெலிவரி செய்யப் படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே, கம்பெனியின் பிரதிநிதி உதிரமாலை என்பவர் மூலம் அவர்கள் கேட்ட தொகை (கடன்தொகை போக, வாகனப் பதிவுச் செலவு சேர்த்து) ரூ.1, 23, 000 (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தி மூன்றாயிரம் மட்டும்) கொடுத்து விட்டேன். Temporary registration செய்து, ஒரு மாதம் முடியும் நாளான நேற்று அவசரம் அவசரமாக வாகனத்தை தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள்.காலையில் வாகனப்பதிவை முடித்து விட்டு அனுப்பி விட்டனர். நானும் வண்டியை எடுத்துக்கொண்டு, பணிநிமித்தமாக நூற்றைம்பது கி.மீ தொலைவிலுள்ள நாகர் கோவிலுக்கு வந்து விட்டேன்.இன்று காலை (01/04/2019) மறுபடியும் நெல்லை ஆதிமாருதி பிரதிநிதி திரு.உதிரமாலை என்பவர் எனக்கு போன் செய்து நேற்று ஆன்லைன் பிரச்சனை காரணமாக rto அலுவலகத்திற்குப் பணம் போய்ச்சேரவில்லை, எனவே மீண்டும் நீங்கள் rto அலுவலகத்திற்கு வண்டியுடன் வாருங்கள் என்று அழைத்தார்.ஏற்கெனவே temporary registration செய்து விட்டு பேப்பரைத் தராமல் இழுத்தடித்தனர்.போன வாரம் வாகனத் தணிக்கையின் போது எனது மாருதி ஈக்கோ வாகனத்தை நாகர்கோவிலில் அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். பின்பு ஆதிமாருதி கம்பெனியில் கெஞ்சி கூத்தாடி temporary registration paper ஐ வாங்கிக் கொடுத்து வண்டியைத் திருப்பி எடுத்து வந்தேன்.மேலும் கம்பெனி தலைமை அலுவலகத்திலிருந்து போன் வந்தால் பத்து மார்க் போடுங்கள் என்று வற்புறுத்தினர்.இவர்களிடம் வண்டி வாங்கியதிலிருந்து மன நிம்மதியை இழந்து விட்டேன்.இதுகுறித்து மேற்படி ஆதிமாருதி நிறுவனத்தின் செயல்பாடுகளை தீர விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது முகவரி :
நெ.ஸ்டீபன் சத்யராஜ்,
த/பெ நெல்சன் ஐயாத்துரை,
5/3/22 (1) பொன் அன்பகம்,
நெல்லை மெயின் ரோடு,
கீழச்சுரண்டை - 627859,
திருநெல்வேலி.
Contact : [protected],
[protected].
Email : [protected]@gmail.com
Maruti Suzuki India customer support has been notified about the posted complaint.
After the service also my car is full of mud and dust worst service