Feb 09, 2018
Updated by money0071987 ரம்மி சர்க்கிள் எப்படி கோடி வெல்வது
இங்கு கோடி எல்லாம் வெல்ல முடியாது, தெரு கோடிக்கு வேனால் போகலாம் .
என்னடா இப்படி சொல்லுறான்னு பாக்குறீங்களா இது தான் உண்மை .தயவு செய்து ரம்மி விளையாடி உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்காதீர் .
இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கே புரியும் .
ஒருத்தன ஏமாற்ற வேன்டுமான அவற்கு ஆசையை தூண்டனும் இது தான் அவரது கொள்கை .
ஆரம்ப விளையாட்டில் சில ஆட்டங்களை வெல்ல உனக்கு வாய்ப்பு தருவார்கள் அதை நம்பி நீங்கள் அடுத்த ஆட்டத்துக்கு நிறைய பணம் கட்டி விளையாடுவீர் ஆனால் உங்களால் வெல்ல முடியாது .எதிரே உள்ளவர் ஒரு கார்டில் வெல்லுவார்.உங்களுக்கு பக்கு என்று இருக்கும் இதய துடிப்பு நிற்கும் அளவுக்கு உங்கள் நிலைமை இருக்கும் .
சில ஆட்டங்கள் மட்டும் தான் எதிரில் மனிதர் விளையாடுவர் அந்த ஆட்டத்தில் உங்களால் சிறிய தொகை மட்டும் தான் வெல்ல முடியும் .
பெரிய தொகை வெல்லும் ஆட்டத்தில் எதிரே உள்ள ரோபோ தான் வெல்லும் இது யாருக்கும் தெரியாது .என்ன ஆச்சிரியமா உள்ளதா இது தான் உண்மை .
சில ஆட்டங்களில் உங்களால் நம்ப முடியாத கார்டு எதிர் உள்ளவருக்கு போகும் அதாவது இரண்டு கட்டு கொண்ட கார்டில் விளையாடும் போது மூன்றாவது கார்டு வரும் இது எப்படி சாத்தியம் .இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிரில் உள்ள ரோபோ நீங்கள் வெல்லும் ஆட்டத்தை தட்டி கொள்ளும் .
நீங்கள் ரம்மியில் பணம் வெல்ல வேண்டுமானால் இரண்டு பங்கு பணம் விட்டு இருந்தால் மட்டும் தான் உங்களால் ஒரு பங்கு பணம் வெல்ல முடியும் .அதாவது ஆயிரம் ரூபா வெல்ல வேண்டுமானால் இரண்டாயிரம் ரூபா விட்டு இருக்க வேண்டும் .அப்பதான் உங்களால் ஆயிரம் ரூபா வெல்ல முடியும் .
அப்படி நீங்கள் எப்படியோ பணம் வென்று வீற்றிகள் என்றால் அந்த பணத்தை உங்களால் பெற முடியாது .நீங்கள் வித்துடறவால் கொடுக்கும் போது உங்கள் அக்கௌன்ட் பிளாக் செய்ய படும் .உங்களால் ஒன்றும் பண்ண முடியாது .
இதற்க்கு பல உதாரணம் கீழ் உள்ள லிங்கில் உள்ளது தவறாமல் பாருங்கள் உங்களை போல நிறைய ஏமாந்தவர்கள் மனம் விட்டு புலம்பி இருக்கார்கள். இதை பார்த்தாவது தயவு செய்து விளையாடி பணத்தை விடாதீர்கள் .
https://www.consumercomplaints.in/rummycircle-com-b100193
http://www.grahakseva.com/topic/rummycirclecom
http://www.mouthshut.com/websites/Rummycircle-com-reviews[protected]
நீங்கள் பணத்தை விட்டுவிட்டால் கஸ்டமர் காரை தொடர்பு கொள்ள முடியாது .குறைத்தது நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கட்டி விளையாடினாள் மட்டும் தான் தொடர்பு கொள்ள முடியும் .
குறைந்த பணம் கட்டி விளையாடியவர் பணம் விட்டால் எங்கு பொய் முறையிடுவது .இதற்கு என்று உங்களால் எங்கும் செல்ல முடியாது .
நீங்கள் பணத்தை விட்டு நடு தெருவுக்கு வரும்போது உங்களால் யாரிடமும் சொல்ல முடியாது .சொன்னால் அசிங்கம் என்று விட்டு விடுவீர் இது தான் அவர்களின் வெற்றி . இதை வைத்து தான் அவர்கள் நிறைய பணத்தை ஏமாற்றுகிறார் .
சில பேர்கள் இதனால் பல லச்சங்களை இயைந்து தற்கொலை நிலைமைக்கு தள்ள பட்டு உள்ளனர் .இப்படி பட்ட விளையாட்டு தேவைதானா நமக்கு .
கிராமப்புறங்களில் சில மனிதர்கள் மரத்தடியில் பைசாவை வைத்து விளையாடுபவரை பிடிக்கும் போலீஸ் எப்படி ஆன்லைனில் லச்சத்தில் ஏமாற்றுபவரை பிடிக்க முடியவில்லை .
இந்த விளையாட்டால் நிறைய இளைஞ்சர்கள் வாழ்க்கையை தொலைத்து நடு தெருவில் உள்ளனர் .அப்படி பட்ட இந்த விளையாட்டு நமக்கு தேவையா ?
சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்து உள்ளது .இன்னும் ஏன் நமது மாநிலம் தடை செய்ய வில்லை .
நீங்கள் ஏதாவது தவறு கண்டு பிடித்து கஸ்டமர் கேரிடம் சொன்னால் அவோலோ தான் உடனே உங்களால் விளையாடாத படி பண்ணிவிடுவார்கள் .
நீங்கள் கார்டு தேய்ச்சி இதில் விளையாடுவதால் உங்களால் எவ்ளோ விட்டோம் என்று தெரியாமலேயே நிறைய பணம் தொலைத்து விடுவீர் .விட்டதை எப்படியாது பிடித்து விட வேண்டும் என்று நீங்கள் போரிடுவீர், ஆனால் உங்களால் முடியாது .மென்மேலும் உங்கள் கையில் இருந்து பணம் பொய் கொண்டே இருக்கும் .
நீங்களே சற்று சிந்தியுங்கள் எவ்ளோ விட்டோம் எவ்ளோ வென்றோம் என்று .கடைசியில் விட்டது தான் அதிகமா இருக்கும் .
இதில் பணம் வெல்லுவதம்பதும், விட்டதை பிடித்து விட வேண்டுமெம்பதும் நடக்காத ஒன்று . தயவு செய்து உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காதீர் .
இதில் அரசு எப்படியாவது தலையிட்டு இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது மட்டும்மல்லாமல் பணத்தை விட்டவர்க்கு எப்படியாது பணத்தை பெற்று தரவும் .
தயவுசெய்து ரம்மிசர்க்கிள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள் .நமது வருங்கால இளைஞ்சர்களை காப்புற்றுங்கள்.
என்றும் சூது வெல்லாது. சூதுவால் நாம் அழியாத்தான் முடியும் .தயவு செய்து சூது விளையாட்டை அனுமதிக்காதீர் மற்றும் விளையாடாதீர் .
ரம்மிசர்க்கிள் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது, தயவு செய்து இதில் ரம்மி விளையாடி உங்கள் வாழ்க்கையை வீணாக்காதீர் .
இது உண்மை என்றால் பகிருங்கள், இல்லை நான் ரம்மி விளையாடியே ஆகுவேன் என்றால் ஆடி உங்கள் பணத்தையும், நேரத்தையும், நிம்மதியும் விட்டு நடு தெருவுக்கு வரும் போது உணவீர்கள்
[protected]@gmaii.com
Please opened my account sir or either amount should be transfered to my bank account