| Address: Reliance Trends, Indhira Nagar, Dharmapuri, Tamil Nadu 636701, India |
ஐயா, எனது பெயர் V.M.பாலசுப்பராமணியன் (கைபேசி எண்:[protected]). நான் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். நேற்று[protected] மாலை தருமபுரியில் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் (Reliance Trends) துணி கடையில் ருபாய் 6340/- ல் கூப்பன் கொடுத்து தள்ளுபடிபோக ரூபாய் 4340/- மற்றும் பிலாட் ஆபரில் ரூபாய் 199/- ற்கு துணிகள் வாங்கினோம். அந்த துணிகள் எடுத்துச்செல்ல பேப்பர் பை கொடுத்தார்கள். அந்த பைக்கு ரூபாய் 7/- யை பில்லில் பதிவு செய்ததை கண்டு நான் மறுப்பு தெரிவித்தேன். ஆனால் பில் வசூல் செய்ய பணியில் இருந்த பெண்கள், நாங்கள் என்ன செய்வது சார் கம்பெணியில் அப்படித்தான் வாங்கச் சொல்லியிருக்கிறார்கள் என்றார்கள். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது சார், நாங்கள் வேளைக்கு இருக்கறவங்க என்று கூறினார்கள். நான் எவ்வளவோ மறுப்பு தெரிவித்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், பழங்கள் வாங்க நாங்கள் ஏற்கனவே கொண்டு சென்றிருந்த கட்டைப்பையில் வாங்கிய அந்த துணிகளை எடுத்துக் கொண்டோம். இருப்பினும் பழங்கள் வாங்க வேண்டியிருந்ததால் வேறு வழியின்றி ரூபாய் 199- க்கு வாங்கிய துணிகளுக்கான பில்லுடன் ரூபாய் 5/- கொடுத்து சிறிய கேரிபேக்கை பெற்றுக்கொண்டோம். பணம் கொடுத்து வாங்கிய துணிகளை எடுத்துச்செல்ல கேரிபேக்கிற்கு தனியாக பணம் வசூல் செய்து வருவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. கேரிபேக்கிற்காக தனியாக கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் மற்றும் உரிய நஷ்டயீட்டுடன் கேரிபேக்கிற்காக என்னிடத்தில் பெற்றுக்கொண்ட ரூபாய் 5/- யையும் சேர்த்து எனக்கு திருப்பி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
Reliance Trends customer support has been notified about the posted complaint.