ஐயா, வணக்கம்,
என் பெயர் சரவணபவன் நான் நேற்று (05.04.2023) இரவு 11.25 சென்னைக்கு செல்வதற்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தேன், அப்பொழுது TN 32 N 3929 பதிவு எண் மற்றும் வழித்தட எண் 177, கள்ளக்குறிச்சி To சென்னை நோக்கி வந்த பேருந்தில் சுமார் 20 இருக்கைகள் காலியாக இருந்தது அதில் ஒவ்வொரு நபர் படுத்திருந்தார்கள் நானும் சக பயணிகளுடன் ஏறி இருக்கைக்காக படுத்திருந்தவர்களை நகர்ந்து அமர சொல்லி கேட்டேன் அவர்கள் சரியாக பதில் அளிக்காததால் நான் உடனே நடத்துனரிடம் ஐயா நகர்ந்து அமர செல்லும்படி வேண்டினேன். அதற்கு அவர் உடனே உனக்கு இந்த பஸ்சில் சீட் இல்லை இறங்குடா என்று சத்தமாக கத்தினார், நான் நீங்கள் தானே நடத்துனர் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றேன் அதற்கு அவர் கொச்சையான வார்த்தைகளாலும் ஒருமையில் பேசியும் கீழே இறங்குடா என்று சொல்லி அநாகரீகமற்ற வார்த்தையால் திட்டினார், நான் பேருந்து எண்ணை குறித்த போது கீழே வந்து என்னை நெட்டி தள்ளிக்கொண்டே வந்தார், உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாது என்று சக பயணிகள் முன்னர் அசிங்கமாக திட்டியும் குறிப்பிட முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டினார். அதே சமயம் ஓட்டுநர் பேருந்து எண்ணை பதிவு செய்யும் போது இடிப்பது போல் பேருந்தை வேண்டுமென்றே இயக்கி நக்கலாக சிரித்தார்.
ஐயா, நான் மரியாதையாக பேசியும் மேற்படி நடத்துனர் அவருடைய பணியினை சரியாக செய்யாமல் அவருடைய பணிக்கடமைகளை மீறி செயல்பட்டு என்னை சக பயணிகள் மற்றும் பொது மக்கள் முன்பாக அசிங்கப்படுத்தி என்னை பயணம் செய்ய விடாமல் பேருந்தில் இருந்து இறக்கி மனதாலும் உடலாலும் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்திய மேற்படி பேருந்து நடத்துனர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சரவணபவன்
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.