| Address: செல்வி க/பெ. சீனிவாசன் நெ. 3, சின்ன தெரு, அம்மூர், வாலாஜா தாலுக்கா, இராணிப்பேட்டை மாவட்டம் |
| Website: TNEB CONSUMER COMPLAINTS.IN |
விடுநர்
செல்வி க/பெ. சீனிவாசன்
நெ. 3, சின்ன தெரு,
அம்மூர், வாலாஜா தாலுக்கா,
இராணிப்பேட்டை மாவட்டம்
cell : [protected]
பெறுநர்
திரு. உதவி செயற்பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம்
நெ. 1, நேரு தெரு, அம்மூர்,
வாலாஜா தாலுக்கா,
இராணிப்பேட்டை மாவட்டம்
ஐயா
பொருள் :
அம்மூர் மின்சார வாரியம், கல்மேல் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள எனக்கு சொந்தமான சர்வே எண்.145/6ல் ஆழ்துளை கிணறுக்கு சம்பந்தப்பட்ட மின் இணைப்பை வழங்க வேண்டும் என்றும் திரு. அப்துல் மஜீத் என்பவருக்கு (வேறு) மற்றொரு சர்வே எண்ணிற்கு மின் இணைப்பை மாற்றம் செய்ய இருப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். நான் செலுத்திய தொகைக்கு திரு.A.அப்துல் மஜீத் என்பவர் பெயரில் எந்த சட்டத்தின் கீழ் ரசீது போடப்பட்டுள்ளது என விளக்கம் வழங்க கோருதல் தொடர்பாக :-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். தங்கள் அலுவலக கட்டுப்பாட்டின் உள்ள கல்மேல்குப்பம் ஊராட்சி பகுதியில் உள்ள 1.47 ஏக்கர் நிலத்தை திரு. A.அப்துல் மஜீத் என்பவர்[protected] தேதியில் திருமதி. முனவர் ஜான் என்பவருக்கு விக்கிரையம் செய்து உள்ளார். மேற்படி நிலத்தை திருமதி. முனவர் ஜான் என்பார்[protected] தேதியில் எனது எப்யருக்கு விக்கிரையம் செய்து உள்ளார். மேர்படி நிலம் விக்கிரைய்யம் செய்யும்போதே 145/6, சர்வே எண்ணில் உள்ள 5 மின் மோட்டார் மற்றும் மின் இணைப்பையு விக்கிரையம் பெறப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன் தாங்கல் தங்கல் அலுவலகத்தில் என் கணவரை வரவைத்து உங்களுடைய நிலத்தில் மின் திருட்டு நடைபெற்று உள்ளது. எனவே, நாங்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டோம் என்றும், நாங்கள் கூறும் ஆவணங்களில் கையெழுத்து போட்டால் மீண்டும் மின் இணைப்பு தருவதாகக் கூறியுள்ளீர்கள். எனது கணவர் கையெழுத்து இட மறுத்துவிட்டதால், என் மகனை தாங்கள் அலுவலகத்திற்கு வரவைத்து கட்ட்டாயப்படுத்தி கயெழுத்து பெறப்பட்டு தொகை[protected] தேதியில் ஏமாற்றி வசூல் செய்யப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளரான என்னிடம் தான் கையெழுத்து இட கேட்டிருக்க வேண்டும், என் மகனிடம் கையெழுத்து வாங்கியது சட்ட விரோத செயலாகும்.
என் கணவரிடம் 52608 செலுத்தினால் உடனடியாக மீண்டும் மின் இணைப்பை தருவதாக திரு. முருகன் அலுவலக பணியாளர் நேரிலும் மற்றும் கைபேசி மூலமாகவும் பலமுறை கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் உள்ளார். இதன் அடிப்படியயில்[protected] அன்று தொகை 52608/- வரைவோலை பெறப்பட்டு[protected] தேதியில் திரு.முருகன் பணியாளரிடம் வழங்கப்பட்டது. மேற்படி தொகை செலுத்திய பிறகு, மின் இணைப்பு வழங்க முடியாஹ்டு என தாங்களும் திரு.முருகன் என்பவரும் கூறியுள்ளீர்கள். மேற்படி தொகை நான் செலுத்தீயதற்கு என் பெயரில் இரசீது போடாமல், திரு.A.அப்துல் மஜீத் என்பவர் பெயரில் இரசீது போடப்பட்டு உள்ளது.
மேற்படி தொகை எனது பெயரில் ரசீது போடாமல் திரு.A.அப்துல் மஜீத் என்பவர் பெயரில் ரசீது போட்டு இருப்பது என்னை ஏமாற்றியதோடு அல்லாமல் தாங்கள் தங்கள் கடமை மற்றும் பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி திரு.A.அப்துல் மஜீத் என்பவருக்கு சாதகமாக செயல்பட்டு உள்ளது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. மேற்படி விபர்ம தொடர்பாக எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
எனக்கு சொந்தமான நிலத்திற்குட்பட்ட சர்வே எண் 145/6 எண்ணில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் திரு.A.அப்துல் மஜீத் என்பவர் மற்றொரு சர்வே எண்ணிற்கு என்னுடைய மின் இணைப்பை மாற்றம் செய்ய மனு வழங்கினால் அம்மனுவை ஏற்க கூடாது என்றும், மேற்படி மின் இணைப்பை அவர் கோரும் சர்வே எண்ணில் மின் இணைப்பு வாங்கினால் தாங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், என்னுடைய இம்மனுவிற்கு தாங்கள் எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் என இம்மனு மூலம் தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
செல்வி
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.