| Address: Kanyakumari, Tamil Nadu |
எனது பெயர் Sasikumar.
Nager coil Telecom District, Neyyoor (Thingal Nagar) branch பகுதியை சார்ந்தவன். My receipt detail are...
========================================
NAME : SASIKUMAR. R
RECEIPT NUMBER : NGC[protected]
D.N. No : [protected]
Cust. ID : [protected]
Paid on : [protected].
AT 60701, Csc Neyyoor
Account Number : [protected]
Amount : 500/-
======================================
Amount paid for Modem
Receipt Number : NGC60701MD[protected]
Paid On :[protected], Csc Neyyoor
Amount :1100/-
=======================================
நான் வேலை தேடும் முயற்சியில் இருக்கும் வேலை இல்லா பட்டதாரி (IT துறை). தகுந்த வேலை கிடைக்காததால் ஆன் லைனில் வேலை தேடும் முடிவில் கடன் வாங்கி ஒரு கம்பியூட்டர் வாங்கிவிட்டேன். Broad Band இணைப்பு வேண்டி BSNL ல் விண்ணப்பித்தேன்.
கேபிள் availablity இருக்கிறது என்று உறுதி கிடைத்த பின் தான் இணைப்புக்கு ரூ. 500/- ம், Broad Band Modem க்கு ரூ. 1100/- ம் கட்டி விண்ணப்பித்தேன். 10 நாட்களில் இணைப்பு தருவதாக சொன்னார்கள்.
12 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் BSNL office சென்று விபரம் கேட்டேன். மழை கரணமாக தாமதம், இன்னும் 1 வாரத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஒரு வாரம் கழிந்தும் இணைப்பு கிடைக்கவில்லை.
அவர்கள் பேசும் விதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாததால் SDE (Kala Vivekananda)வை சந்தித்து விபரம் தெரிவித்தேன். அவர்கள் office இல் விசாரித்த பிறகு இன்னும் 3 நாட்களில் நிச்சயமாக கிடைக்கும் என்று சொன்னர்கள்.
SDE சொன்ன 3 நாட்களும் கழிந்தது இணைப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.அதன் பிறகு SDE ஐ சந்திக்க 3 நாட்கள் தொடர்ந்து சென்றும் அவர்களை சந்திக்க முடியவில்லை, office ல் இல்லை. தற்பொழுது அவர் நீண்ட leave ல் இருப்பதாக கேள்விப்பட்டேன்
இங்கும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக இல்லை இணைப்பு மட்டும் கிடைக்கவில்லை.
JTO ( I think his name is 'Titus', his mobile number: [protected] ) ஐ சந்தித்து விபரம் கூற முடிவு செய்தேன். 11 நாட்களாக தொடர்ந்து சென்றேன், office ல் காத்திருந்தேன் JTO வை சந்திக்கவே முடியவில்லை. அவர் office க்கு வருவதே இல்லை போலும், அவரது அறை எப்பொதும் பூட்டியே இருக்கிறது.
கேட்டால் சற்று முன்னர் தான் வந்து சென்றார் பார்க்கவில்லையா என்கிறார்கள் (அவர் மின்னல் போன்று கணப்பொழுதில் தொன்றி மறைபவர் என்று எனக்கு தெரியாது). JTO, daily office வருவதாக பொய் சொல்ல சில ஊழியர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள். அவர் office க்கு வருவதில்லை என்று காத்திருந்த கஸ்டமர்களுக்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும் மட்டுமே தெரியும்.
அவரது மொபைல் போன் நம்பர் கேட்டால் office ல் யாரும் தர மறுக்கிறார்கள். எங்களுக்கு தெரியாது என்று சொன்னாகள். பெரும் முயற்ச்சிக்குப் பிறகு அவரது நம்பர் கிடைத்தது (office ல் இருந்து அல்ல).
எனது Broad Band இணைப்பு தேவையை தெளிவாக எடுத்துக் கூறினேன், இன்று உடனே தருவதாக உறுதியாய் சொன்னார். அன்றும் கிடைக்கவில்லை, மறுநாளும் தொடர்பு கொண்டு கேட்டேன்; நேற்றும், இன்றும் வேறு வேலை இருப்பதால் நாளை உறுதியாக கிடைக்கும் என்றார், நானும் காத்திருந்தேன். ஆனால் இணைப்பு மட்டும் கிடைக்க்வில்லை. கேட்கும்போது பதில் மட்டும் வந்துகொண்டிருக்கிறது.
அடுத்த 10 நாட்களாக JTO உம் இப்படியே வெறும் பதில் மட்டுமே கூறிக்கொண்டிருக்கிறார். இணைப்பு தர மறுக்கிறார். காரணம் என்ன? புரியவில்லை....
எங்கள் பகுதியில் உள்ள BSNL ஊழியர்கள் இணைப்பு சம்பந்தமாக எந்த வேலை செய்யவேண்டுமானாலும் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் நடக்கும் என்று பரவலாக அனேக கஸ்டமர்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.
இல்லையெனில் இதுபோன்று பல நாட்கள் அலைய வைப்பார்கள் என்று இந்தபகுதியில் உள்ள ஊழியர்களால் பாதிக்கப்பட்ட அனேக கஸ்டமர்கள் சொல்கிறார்கள். இவர்களால் (BSNL ஊழியர்களால்), இவர்களின் செயலற்ற நிலையால் இன்னும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பல கஸ்டமர்களை என்னால் அடையாளம் காட்ட முடியும்
JTO வின் பேச்சிலும் நம்பிக்கை இல்லாததல் office ல் சென்று உண்மை என்ன என்று தெரிய office க்கு மீண்டும் சென்றேன். அங்கு லைன் மேனிடம் விசாரித்தேன் அவர் JTO வை தனியாக சந்தித்து கவனித்தால் உடனே இணைப்பு கிடைக்கும் என்று சொன்னார்.
எனக்கு சிரிப்பாக இருந்தது, என்ன சொல்ல? நான் இதுவரை அவரிடம் தனியாக தான் பெசியிருக்கிறேன். பிறகு தான் அவரின் பெச்சில் உள்ள அர்த்தம் புரிந்தது, 'லஞ்சம்' எதிர்பார்க்கிறார்கள் என்று, இணைப்பு தர மறுக்க வேறு காரணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
அதன் பிறகு கடந்த 6 நாட்களாக நான் 'போன் கால்' செய்தால் இணைப்பை உடனே கட் செய்கிறார். மேற்கொண்டு அவரை தொடர்பு கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. Office லும் காணமுடிவதில்லை போனிலும் பெச மறுக்கிறார். இணைப்புக்கு நான் என்ன செய்வது? எனது வருமானத்துக்கு நான் என்ன செய்ய? ...
அரசு ஊழியகள் இப்படி வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களின் நிலையை புரிந்து கொள்ளாமல் அவர்களின் வேலை தேடுதலுக்கு பெரும் தடையாக இருப்பதும், எங்களை அலைய வைப்பதும் மிகவும் வருந்ததக்கதாக இருக்கிறது.
BSNL ஊழியர்கள் எஙளுக்கு உதவி செய்ய வேண்டாம் அவர்களது கடமையை மட்டும் செய்தாலே எஙகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
என் வீட்டின் மிக அருகிலேயே 10 மீட்டர் தூரத்துக்குள் தான் கேபிள் செல்கிறது அதிலிருந்து லூப்பிங் செய்ய மிக அதிக பட்சமாக 3 மணி நேரம் தான் ஆகும். இந்த எளிய பணியை கூட செய்ய முடியாமல் இருந்தால் இவர்கள் எதற்க்கு அரசு ஊழியர்களாக இருக்கிறார்கள். இதை செய்யாமல் இப்படி மனிதாபிமானம் இன்றி கடமையை செய்யாமல் வேலை கிடைக்காத என்னை, Broad Band இணைப்பு தராமல் மேலும் நாட்கடத்துவது பெரிதும் வேதனையாக இருக்கிறது.
JTO டம் இதற்கு முன், "உஙளால் இணைப்பு தர இயலவில்லை எனில் நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள் நான் தனியார் துறையில் இணைப்பு பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லியும், அதையும் பொருட்படுத்தாமல் இணைப்பு தர மறுக்கிறார்கள்".
என்னை இப்படி எனது பணியை செய்ய விடாமல் முடக்கி வைத்திருக்கும் ஊழியர்களின் செயலற்ற நிலையை பற்றி மேலிடத்தில் புகார் கொடுக்க முடிவு செய்து இந்த புகார் மனுவை அனுப்புகிறேன்.
BSNL க்கு புதிய இணைப்பு மற்றும் கஸ்டமர்கள் வேண்டாம் என்றால் BSNL office க்கு முன்புறம் "புதிய இணைப்பு கொடுக்கபட மாட்டாது" என்று அறிவிப்பு பலகை வைக்குமாறு பணிவோடு கேட்கிறேன். மேலும் விண்ணப்பதை ஏற்று வேண்டுகொளை செய்ய முடியாமல் காலம் கடத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் JTO, SDE மற்றும் ஊழியர்களை தண்டிக்க வேன்டும்.
BSNL ன் கடை நிலை ஊழியர்கள் தங்கள் கடமையை ஒழுங்காக செய்யாமல் இருப்பதற்க்கு SDE, JTO போன்ற நிர்வாகிகள் தான் காரணம். இவர்கள் திறமையாக இருந்தால் ஊழியர்கள் குறித்த நேரத்தில் தங்கள் கடமையை சிறப்பாக செய்வார்கள்.
ஊழியர்களை விட திறமையற்ற இந்த அதிகாரிகளை தான் தண்டிக்க வேண்டும். கஸ்டமர்களை மீண்டும் கஸ்டப்படுத்தாமல் அவர்களுக்கு ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.
BSNL போன்ற ஒரு சிறந்த நிறுவனத்தின் திறமையான செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் செயல்படும் இது போன்ற (JTO, SDE) உயர் பொறுப்பில் இருக்கும் திறமையற்ற நிர்வாகிகளையும், வேலை செய்ய முடியாதவர்களையும், BSNL என்ற மகத்தான பயிரை அழிக்கும் விஷ செடிகளையும் அப்புறப்படுத்தி, திறமையானவர்களை வேலையில் அமர்த்தி சிறந்த நிறுவனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறேன்.
எனக்கு உடனடியாக Broad Band இணைப்பு தந்து உதவுமாறு வேண்டுகிறேன்.
BSNL (Neyyoor branch) ஊழியர்களால் Broad Band இணைப்பு கிடைக்காமல் பாதிக்கபட்ட, வேலை கிடைக்காத பட்டதாரி ( IT )
Sasikumar. R
Mobile num : [protected]
email : sasi.[protected]@gmail.com
Aug 13, 2020
Complaint marked as Resolved
i also send SMS to 1909
sandip [protected]