ADVERTISEMENT

[Resolved]  toilet — 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' - ஊழல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் பிரமானம்பட்டி ஊராட்சிக்கு 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்விருதினை பெற எவ்வித தகுதியும் இந்த ஊராட்சிக்கோ ஊராட்சி மன்ற தலைவருக்கோ (மா.முத்துராமன்) இல்லை என்பதே உண்மை. 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது பெற பல ஊழல்களை செய்திருக்கிறார்கள். 'நிர்மல் கிராம் ப்ரோஸ்கர்' விருது பெற்றதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டறிந்தோம். அதற்கு 8 காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் இதில் 7 காரணங்கள் பொய்யான தகவல்கள். 1. பிராமனம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 441 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் பிராமனம்பட்டியில் மட்டுமே 7 தனிநபர் கழிப்பறைகள் உள்ளது. மீதமுள்ள 343 கழிப்பறைகள் கட்டபடாமலே கணக்கு காட்டப்பட்டுள்ளது. அரசு மானியமாக ஒரு கழிப்பறைக்கு சுமார் 1200 (ஒரு வருடத்திற்கு முன்பு) ரூபாயிலிருந்து 2200 (தற்போது) ரூபாய்வரை கொடுக்கப்படுகிறது. இதன் அடிபடையில் பார்த்தால் ஒரு வருடத்திற்கு முந்தய கணக்குப்படி சுமார் 4.12 லட்ச ரூபாயும் தற்போதைய கணக்குப்படி 9.55 லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன்? இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தானே பயப்பட வேண்டும்? இவர்கள் பயப்பட காரணம் என்ன? இவர்கள் கூறும் கணக்கு உண்மை எனில் எங்கள் ஊரில் கட்டப்பட்டதாக கூறும் 441 கழிப்பறைகளில் 434 கழிப்பறைகளை காணாமல் போன மாயம் என்ன? கண்டுபிடித்து தருவார்களா? இந்த அதிகாரிகள்? ஒரு சினிமாவில் வடிவேலு கிணறு காணவில்லை என்று கம்ப்ளைன்ட் கொடுப்பார் அதுபோல் கம்ப்ளைன்ட் கொடுத்தால் கண்டு பிடித்து தருவார்களா? எங்கள் ஊரின் உண்மை நிலையை அறிய எங்கள் ஊருக்கு வந்து பார்யிடலாமே? தயக்கம் ஏன்? (ஊராட்சி மன்ற தலைவர் மா.முத்துராமன் வீட்டில் கழிப்பறை இல்லை என்பது குறிபிட்ட தக்கது) 2. ஆரம்ப பள்ளிகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது . உண்மை.
3. அங்கன்வாடி மையங்களுக்கு கழிவறை இருப்பதாக சொல்வது பொய்யான தகவல்.
4. மழைநீர் சேகரிப்பு ADMK ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தற்போது அதுபற்றி அறிவுறுத்தப்பட்டது என்று சொல்வது பொய்யான தகவல். தற்போது அந்த தொட்டிகள் எவர் வீட்டிலும் இல்லை என்பதே உண்மை.
5. திட கழிவு மேலாண்மை திருமதி. விஜயராணி என்பவரால் மண்புழு உரம் தயாரிக்கபடுவதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல். அப்படி தயாரிப்பது உண்மை எனில் இன்றே 1 கிலோ உரம் என்ன விலையானாலும் வாங்க நான் தயார்? கொடுக்க முடியுமா அவரால்?
6. கழிவு நீரில் தோட்டம் அமைக்க அறிவுருதபடவில்லை.
7.மகளிர் சுகாதார வளாகம் பராமரிபின்றி கிடப்பதே உண்மை.
8. ஊராட்சியில் குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிறது. இது தான் முழு சுகாதாரமா? ஊழல் seyvathu தவிர வேறுஎவ்வித செயல்பாடுகளும் இல்லாத ஊராட்சிக்கு விருது தந்தது அந்த விருதை அவமான படுத்தும் விதமான செயல். இதுமட்டுமில்லாமல் எங்கள் ஊராட்சி மன்ற தலைவர் மா.முத்துராமன் திருட்டு தனமாக ஏரியூர் மணிமுத்தாற்றில் மணல் அள்ளி வியாபாரம் செய்தது. தனது வயலில் உள்ள வீட்டுக்கு கொக்கி போட்டு திருட்டு மின்சாரம் பயன்படுத்தி மின்வாரியதினரால் பிடிக்கப்பட்டு 1200 ரூபாய் அபதாரம் கட்டியது. போன்ற பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இப்படி பட்ட திருடன் விருது பெரும் பொது அவ்விருதின் மரியாதையை மக்கள் மத்தியில் கெடுக்கிறார்கள்.
இந்த ஊழல் பெருச்சாளிகளை அரசு கண்டு கொள்ளாதது ஏன்?
யாரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் யாரிடம் முறையிடுவது? இப்படிக்கு
சே. இளமாறன்
குண்டேந்தல்பட்டி
திருக்கோஷ்டியூர் post
திருப்பத்தூர் taluk
சிவகங்கை districtTamil nadu
phone : [protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Aug 14, 2020
Complaint marked as Resolved 
Complaint comments  Add a CommentShareTweet
Post your Comment
  I want to submit Complaint Positive Review Neutral Comment
  code

  Contact Information

  toilet
  India
  File a Complaint
  ADVERTISEMENT